கம்பராமாயணம் 1490 · அயோத்தியா 2.7

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்தணர் - வேதம் வல்ல வேதியர்; கரிய மாலினும் - கருநிற உருவினனாய திருமாலைக் காட்டிலும்; கண்ணுதலானினும் - நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானைக் காட்டிலும்; உரிய தாமரைமேல் உறைவானினும் - தனக்கே உரிய திருவுந்தித் தாமரை மேல் வீற்றிருந்தருளும் பிரமனைக் காட்டிலும்; விரியும் - பரந்து விளங்கும்; ஓர் பூதம் ஐந்தினும் - ஒப்பற்ற பஞ்ச பூதங்களைக் காட்டிலும்; மெய்யினும் - சத்தியத்தைக் காட்டிலும்; பெரியர் - மேம்பட்டவர் ஆவர்; (அவர்களை) உள்ளத்தால் - மனப்பூர்வமாக; பேணுதி - புறந்தருவாயாக.

மும்மூர்த்திகள் - உலகிற்கு நிமித்த காரணர் - பஞ்சபூதம் உலகிற்கு முதற் காரணம். அவற்றின் வேறுபடாதது உலகம். அதனால், பௌதிகம் எனப்பெயர் பெறும். மெய் - உலகிற்கு அடிப்படையாகிய காரணமாயிருந்து உலகு இயங்கத் துணைபுரிவது ஆதலின் துணைக்காரணம் எனவும் கூறலாம். இவை அனைத்தினும் அந்தணர் உயர்ந்தோர். முத்தேவர் உயர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்தது; ஆகலின் அவரை வைத்து அந்தணர் உயர்வை எடுத்துக் காட்டினர். ‘உரிய தாமரை’ பலர்க்கு உரியதாகாது அவனுக்கே உரிய தாமரை. அது திருவுந்தித் தாமரை. மெய்யினும் பெரியர் எனவே அவர்க்கு மெய் இன்றியமையாதது என்பதாம். ‘உள்ளத்தால்’ - ஆல் ‘ஒடு’ என்ற உடனிகழ்ச்சிப் பொருளில் வந்துள்ளது. இவ்வுருபு இப்பொருளில் வருவது இலக்கணத்தில் பழைய வழக்கு. பேணுதி - புறந்தருக. அஃதாவது பின்னின்று காத்தல்; குழந்தையைத் தாய் காக்குமாறு போலக் காத்தலாம். வேதியர்க்கு இருந்த சமுதாயச் செல்வாக்கினை உணர்க. இவ்வறவுரை இப்படலத்து முப்பதாம் பாடலில் முடியும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Than dark Tirumāl, than the one with the eye in his brow,
  2. than him who dwells on the lotus that is his alone,
  3. than the five vast elements, than truth itself,
  4. greater are the brahmins; cherish them with all your heart."

What the poem says

Vacittaṉ's first counsel concerns the brahmins, the keepers of the Veda. He ranks them above the three great gods, Tirumāl, Civaṉ with his third eye, and Piramaṉ seated on the lotus that grows from Tirumāl's navel, and even above the five elements and truth.

The king is to protect them as a mother guards her child. The verse reflects the social standing such teachers then claimed. Vacittaṉ's counsel continues until the thirtieth verse of this canto.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kariya māliṉum, kaṇṇutalāṉiṉum,
uriya tāmarai mēl uṟaivāṉiṉum,
viriyum pūtam ōr aintiṉum, meyyiṉum,
periyar antaṇar; pēṇuti uḷḷattāl.'