கம்பராமாயணம் 1491 · அயோத்தியா 2.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மைந்த! - மகனே!; அந்தணாளர் முனியவும் - வேதியர்கள் வெகுளவும்; அவர் - அவ்வேதியர்; சிந்தையால் - மனத்தோடு பொருந்தி; அருள் செய்யவும் - கருணை புரியவும்; தேவருள் - தேவர்களுள்; நொந்து உளாரையும் - வருத்தம் அடைந்தவர்களையும்; நொய்து உயர்ந்தாரையும் - எளிதாக மேம்பட்டவர்களையும்; எண்ண - கணக்கிட; வரம்பும் உண்டோ - அளவும் இருக்கின்றதோ? (இல்லை என்றபடி).
தேவர்களில் அந்தணர் சீற்றத்தால் நொந்தோர் பலர்; அந்தணர் கருணையால் மேம்பட்டோர் பலர் எனவே தேவரினும் பெரியர் அந்தணர். ‘நிறைமொழி மாந்தர் பெருமை’ என்னும் குறள் (குறள். 28.) உரையில், ‘நிறைமொழி - அருளிக்கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி’ என்று பரிமேலழகர் எழுதிய உரையை இங்குக் கருதுக. நொந்துளார் - அகத்தியர் சபித்தலால் இந்திர பதவி பெற்ற நகுடன் பாம்பாயினமை காண்க. மேம்பட்டார் - கௌசிக அரசன், பிரம முனிவனாகி விசுவாமித்திரனாய்ப் புகழ்பெற்றமை வசிட்டன் அருளால் ஆயினமை காண்க. ஆங்கு, ஆம், கொல் என்பன அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Through the brahmins' anger, and through the grace
- they grant from the heart, among the gods
- those who were brought low and those who easily rose high:
- my son, is there any end to them, if one tries to count?"
What the poem says
Vacittaṉ supports his claim with examples. Among the gods themselves, many have fallen through a brahmin's anger and many have risen through a brahmin's grace, so the brahmins are greater than the gods.
Two cases are recalled: Nakuṭaṉ, who had attained the throne of Intiraṉ but was turned into a serpent by the curse of Akattiyaṉ, and the king Kaucikaṉ, who became the brahmin sage Vicuvāmittiraṉ with Vacittaṉ's own blessing. A Tirukkuṟaḷ couplet likewise says the words of the perfected take effect whether spoken in grace or in anger.