கம்பராமாயணம் 1494 · அயோத்தியா 2.11

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உருளும் - (வட்டவடிவாய் இருத்தலின்) உருண்டு செல்லும் சக்கரத்தையும்; ஒண் - ஒள்ளிய; கவர் எஃகமும் - முக்கிளையாய் உள்ள வேலாகிய சூலவேலையும்; மருள் இல் - மயக்கமற்ற; வாணியும் - சொல் மகளையும்; வல்லவர் - உடைமையாகக் கொண்டு வல்லமை பெற்றவராய; மூவர்க்கும் - முக்கடவுளர்களுக்கும்; தெருளும் - தெளிந்த; நல் அறமும் - நல்ல தருமமும்; மனச் செம்மையும் - கோடுதல் இல்லாத நேரிய மனமும்; அருளும் - இரக்கமாய கருணையும்; நீத்தபின் - விட்ட பிறகு; ஆவது - நன்மை; உண்டாகுமோ - உளதாகுமோ? (ஆகாது என்றபடி).

ஆற்றல் படைத்த முத்தேவரும் தம் ஆற்றலால் அன்றி, அறம், நடுவு நிலைமை, அருள் என்னும் நற்பண்புகளைக் கொண்டே அனைத்தையும் சாதிக்க இயலும் என்பதை உணர்ந்து, நீயும் இம்மூன்றையும் பற்றி இரு என்று வசிட்டன் இராமனுக்குக் கூறினன். திருவடி சூட்டு படலத்து வசிட்டன் கூறிய “சீலமும் தருமமும், சிதைவில் செய்கையாய்! சூலமும், திகிரியும், சொல்லும் தாங்கிய மூவர்க்கு” என்பதை (2447) இங்கு ஒப்பு நோக்குக. பிறர் கருவியாற் செய்யும் செயலை, வாய்மொழியைக் கொண்டே செய்தலின் ‘வாணியும் வல்லவர்’ என்று பிரமனைக் கூறினர். “வேலன்று வென்றி தருவது மன்னவன், கோல் அதூஉம் கோடாது எனின்” என்னும் குறள் (546.) இதனோடு ஒத்துக் கருதத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The rolling discus, the bright three-pronged spear,
  2. and the unerring goddess of speech: the three mighty ones who wield them,
  3. if they gave up clear, good dharma, uprightness of mind
  4. and compassion, could any good be left to them?"

What the poem says

Vacittaṉ turns to the virtues of a ruler. Even the three great gods, Tirumāl with his discus, Civaṉ with his trident and Piramaṉ, whose weapon is the goddess of speech, since he creates by his word, achieve nothing by power alone. Without righteousness, an upright mind and compassion, their might would avail them nothing.

Irāmaṉ should therefore hold to these three qualities. The Tirukkuṟaḷ makes the same point: victory comes not from the spear but from the king's sceptre, provided it does not bend.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uruḷum nēmiyum oṇ kavar eḵkamum,
maruḷ il vāṇiyum, vallavar mūvarkkum
teruḷum nal aṟamum, maṉac cemmaiyum,
aruḷum, nīttapiṉ āvatu uṇṭākumō?'