கம்பராமாயணம் 1496 · அயோத்தியா 2.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(ஒருவன்) யாரொடும் - யார் ஒருவரோடும்; பகை கொள்ளலன் என்றபின் - மாறுபாடு கொள்வதிலன் என்றால்; (அவனுக்குப்) போர் ஒடுங்கும் - சண்டை இல்லாமற்போகும்; புகழ் ஒடுங்காது - புகழ் குன்றாது நிறையும்; தன் - அவனுடைய; தார் - படை; ஒடுங்கல் செல்லாது - கெடாது; அது தந்தபின் - அவ்வாறு படைகெடாது வளருமாயின்; வேரொடும் கெடல் - (அவனைப் பகைக்கும் பகை) அடியோடு அழிதலை; வேண்டல் உண்டாகுமோ? - மட வேண்டிப் பெறுதல் உண்டாகுமோ? (வேண்டாம் தானே நடக்கும்.)
யாரொடும் பகைகொள்ளாமல் இருந்தால் புகழ் பெருகும்; படை அழியாது வளரும். எனவே அவனைப் பகைக்கப் பிறர் நினைக்கினும் அது செய்யார்; அதனால், பகையே இல்லாது ஒழியும். தார் என்பது முன்னணிப் படையைக் குறிக்கும். இங்குப் பொதுவாகப் படை என்னும் கருத்தில் வந்துள்ளது. எல்லாரிடமும் அன்பு செய்தல் ஆக்கம் தரும் என்ற கருத்தினை “பலத்தால் வெல்லப்பட்ட பகைவன் சமயம் வாய்த்தபோது கேடு செய்வான்; அன்பால் வெல்லப்பட்ட பகைவன் எப்போதும் கெடுதல் செய்யான்” என்னும் புத்த பகவான் மொழியோடு இணைத்துப் பார்க்கலாம். “ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்னும் (கொன்றை. 6.) கருத்தையும் இங்குக் கருதுக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Once a man will be at enmity with no one,
- war dies away, yet his fame does not dwindle; his
- army does not waste away; and when that is so,
- need he even wish for his foes to perish root and all?"
What the poem says
Vacittaṉ's next lesson is to make no enemies. A king who quarrels with no one has no wars to fight, yet his fame keeps growing and his army stays whole; with such strength, no one will dare to oppose him, and enmity simply disappears without his having to destroy anyone.
The commentary compares the Buddha's teaching that an enemy conquered by force waits for revenge while one won by love never harms, and an old Tamil maxim that whoever makes enemies of the whole town perishes root and branch.