கம்பராமாயணம் 1536 · அயோத்தியா 2.53

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொடிய அக் கூனி - கொடுமை படைத்த அந்தக் கூனி; தெழித்தனள் - சப்தமிட்டாள்; உரப்பினள் - அதட்டினாள்; சிறுகண் தீ உக விழித்தனள் - சிறிய கண்களிலிருந்து நெருப்புப் பொறி சிந்த விழித்துப் பார்த்தாள்; வைதனள் - திட்டினாள்; வெய்து உயிர்த்தனள் - வெப்பமாக மூச்சு விட்டாள்; அழித்தனள் - (தன் கோலத்தைக்) கெடுத்துக்கொண்டாள்; அழுதனள் - ; அம்பொன் மாலையால் - (கைகேயி அளித்த) அழகிய பொன் மாலையினால்; நிலத்தை - பூமியை; குழித்தனள் - குழியாக்கினாள்.

கூனியின் கொடுமை - பெயரிலும், உடலிலும், சொல்லிலும், செயலிலும், குணத்திலும் உள்ளது. குழந்தையாய் இருக்கும்போது விளையாட்டாகச் செய்த செயலை வஞ்சம் வைத்துக்கொண்டு பழிதீர்க்க நினைத்தாள். ஆதலின் கொடியள் ஆயினாள். பொன்மாலையை நிலத்தில் எறிந்தாள்; அது தாக்கி நிலம் பள்ளம் ஆயிற்று. ‘ஏ’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She shrieked, she scolded, she glared with her small eyes
  2. spilling fire, she cursed, she breathed hot breaths,
  3. she tore at herself, she wept, and with that lovely gold necklace
  4. she gouged a hollow in the ground, that cruel hunchback.

What the poem says

Instead of thanking the queen, Mantarai explodes: she shouts, scolds, glares, curses, sighs hotly, spoils her own appearance and weeps.

Then she flings the gold necklace to the floor so hard that it dents the ground. The poet calls her cruel because she has nursed a grudge over a child's harmless prank.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teḻittaṉaḷ, urappiṉaḷ, ciṟu kaṇ tī uka
viḻittaṉaḷ, vaitaṉaḷ, veytu uyirttaṉaḷ,
aḻittaṉaḷ, aḻutaṉaḷ, am poṉ mālaiyāl
kuḻittaṉaḷ nilattai, ak koṭiya kūṉiyē.