கம்பராமாயணம் 1537 · அயோத்தியா 2.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேதனைக் கூனி - துன்பத்தைச் செய்கின்ற கூனியானவள்; பின் - பிறகு; வெகுண்டு நோக்கி - (கைகேயியை) கோபித்துப் பார்த்து; நீ பேதை - நீ அறிவற்றவள்; பித்தி - மனநிலை சரியில்லாதவள்; நீ நிற்பிறந்த சேயொடும் - நீ உன்னிடம் பிறந்த பரதனோடும்; துயர்ப்படுக - துன்பப்படுவாயாக; நான் - ; உன் மாற்றவள் - உன் சக்களத்தி கோசலையின்; தாதியர்க்கு - தாதிகளுக்கு; நெடிது - நீண்ட காலம்; ஆட்செய - அடிச்சி வேலை செய்ய; தரிக்கிலேன் - பொறுக்க மாட்டேன்; என்றாள் - என்று சொன்னாள்.
இராமன் அரசனானால் கோசலை அரசன் தாயாவாள். கோசலையின் தோழியர் மற்றவர்களைத் தமக்குப் பணிசெய்ய அதிகாரம் இடுவர் ஆதலின் ‘மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்’ என்று மந்தரை உரைத்தாள். ‘நெடிது’ - இராமன் அரசு வீற்றிருக்கும் காலம்வரை. ஆகவே, அது நீண்டதாயிற்று. எனவே என் ஆயுள் முழுக்கக் கோசலையின் அடிமைப் பெண்களுக்கு நான் அடிமை செய்து வாழ வேண்டி வந்துவிடும்; அதற்கு நான் சம்மதிக்கமாட்டேன் என்றாள் கூனி. தன்மையறியாமல் தனக்கு வரும் கேட்டை வரவேற்கிறாள் ஆதலின், கைகேயியைப் பேதை என்றும் பித்தி என்றும் உரைத்தாள். இப்படியே போனால் கைகேயியாகிய நீயும் கோசலைத் தாதியர்க்கு ஆட்செய்ய வேண்டி வரும் என்பதையும் கூனி குறிப்பால் அறிவித்தாளாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then the tormenting hunchback glared at her in anger:
- "You simpleton! You madwoman! You, along with the son born of you,
- may you suffer! As for me, to slave for long years for the maids
- of your rival, that I will not endure," she said.
What the poem says
Mantarai insults the queen to her face as a fool and a madwoman who welcomes her own ruin, and curses her and her son Paratan to suffer.
Her own fear is personal: once Irāmaṉ is king, Kōcalai will be the king's mother, and Kōcalai's maids will order everyone else about. Mantarai refuses to spend the rest of her life serving them, and implies that Kaikēyi herself will be reduced to the same position.