கம்பராமாயணம் 1538 · அயோத்தியா 2.55

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிவந்த வாய்ச் சீதையும் - சிவந்த வாயினை உடைய சீதையும்; கரிய செம்மலும் - கருமையான மேனியுடைய இராமனும்; நிவந்த - உயர்ந்த; ஆசனத்து - சிங்காசனத்தில்; இனிது இருப்ப - இனிமையாக வீற்றிருப்ப; நின் மகன் - பரதன்; அவந்தனாய் - ஒன்றுமற்றவனாய்; வெறு நிலத்து - தரையில்; இருக்கல் ஆன போது - இருக்கும்படி நேரும் காலத்தில்; உவந்தவாறு என்? - (நீ) மகிழ்ந்த காரணம் யாது?; இதற்கு உறுதி யாது - இம்மகிழ்ச்சி அடைவதற்கு (நீ பெற்ற) நன்மை யாது?; என்றாள் - என்று கூறினாள்.

‘இராமனும் சீதையும் சிங்காதனத்தில் வீற்றிருக்கையில் அவர்கள் பாதத்தின் கீழ் வெறுந்தரையில் பரதன் இருப்பானே! இதற்கா மகிழ்ச்சி அடைகிறாய்? நீ மகிழ்ச்சி அடையும்படி உனக்கு உண்டான நன்மைதான் என்ன?’ என்று மந்தரை கைகேயியை வினவினாள். தனக்கு வருகின்ற தொல்லையை மேற்பாட்டில் கூறியபிறகு, இங்குப் பரதனுக்கு வருகின்ற துன்பத்தைக் கூறினாள் என்க. அவத்தன் - அவந்தன் - வீணானவன் - ஒன்றுக்கும் பயனின்றிப் போனவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "While red-lipped Cītai and the dark lord
  2. sit at ease upon the lofty throne, and your son,
  3. a nobody, has to sit on the bare ground,
  4. why do you rejoice at this? What good is there in it?" she said.

What the poem says

Having spoken of her own humiliation, Mantarai turns to Paratan's. When Irāmaṉ and Cītai sit on the high throne, Kaikēyi's son will sit on the bare floor at their feet, a man of no account.

What, she asks, does Kaikēyi have to be happy about? What does she gain from this?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'civantavāyc cītaiyum, kariya cemmalum,
nivanta ācaṉattu iṉitu iruppa, niṉ makaṉ,
avantaṉāy veṟu nilattu irukkal āṉa pōtu,
uvantavāṟu eṉ itaṟku? uṟuti yātu?' eṉṟāḷ.