கம்பராமாயணம் 1539 · அயோத்தியா 2.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோசலை உறுதி மறந்திலள் - கோசலை (தனக்குரிய) நன்மையை மறந்தாளில்லை; (அதனால்) மைந்தனும் - இராமனும்; சிறந்த - மேம்பட்ட; நல் - நல்ல; திருவினில் திருவும் - செல்வங்களுக்கெல்லாம் மேம்பட்ட அரசச் செல்வத்தையும்; எய்தினான் - அடைந்தான்; நீ பெற்றதால் - நீ பிள்ளையாகப் பெற்றதால்; பரதன் -; இறந்திலன் - செத்தானில்லை; என்செய்து ஆற்றுவான் இருந்தனன் - என்ன காரியம் செய்து முடிப்பதற்காக இருந்துகொண்டுள்ளான்; பிறந்திலன் - பிறந்தும் பிறவாதவனே; என்றாள் - என்று கூறினாள்.
அரசேற்று முடிசூடல் ஆகிய செயல் இராமனுக்கு உண்டானாற்போலப் பரதன் என் செய வாழ்கின்றான்; அவன் இருந்தும் இறந்தவனே என்றாள் கூனி. இதுவும் பரதனுக்கு வருகின்ற இழப்பைக் காட்டி புலம்பி, கைகேயியின் மனத்தைத் திரிக்க முயன்றதாம். திருவினில் அரசச்செல்வம்; எல்லாச் செல்வங்களிலும் மேம்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Kōcalai did not forget her own advantage; and her son
- has won the fortune that surpasses all fine fortunes;
- Paratan has not died; he lives on; to accomplish what?
- Paratan is as one never born, because it was you who bore him," she said.
What the poem says
Mantarai contrasts the two mothers. Kōcalai looked after her interests, and so her son has won the greatest of all fortunes, the kingdom.
Paratan, as Kaikēyi's son, might as well never have been born: he lives, but for no purpose. Mantarai is lamenting Paratan's loss in order to turn his mother's mind.