கம்பராமாயணம் 1551 · அயோத்தியா 2.68

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மந்தரை - கூனியானவள்; அம்மொழி கேட்டும் - கைகேயி கூறிய அச்சொற்களைக் கேட்டும்; நஞ்சு தீர்க்கினும் - விடத்தை (மணி, மந்திரம், மருந்து முதலியவற்றால்) தீர்த்தாலும்; தீர்கிலாது - நீங்காது; அது - அந்த விடம்; நலிந்தென்ன - (மீண்டும்) வருத்துதல் போல; வஞ்சி போலி! - வஞ்சிக் கொடி போல்பவளே!; தஞ்சமே! - (எனக்குப்) பற்றுக்கோடாக இருப்பவளே!; உனக்கு உறுபொருள் - உனக்கு நன்மை தரும் செயல்; உணர்த்துகை - அறிவித்தலின்று; தவிரேன் - நீங்கமாட்டேன்; என்று - என்று சொல்லி; அடிமிசை வீழ்ந்து - (கைகேயியின்) கால்களில் விழுந்து வணங்கி; உரை வழங்கும் - மீண்டும் பேசலானாள்.

மந்தரையின் பேச்சுகளைத் தொடர்ந்து எட்டுச் செய்யுள்கள் கூறும். விடம் மருந்தாலும் தீராது மீளவும் வருந்துதல் போலும், மந்தரை மீண்டும் கைகேயியின் மனத்தைக் கலைக்க முயல்வது என்றார். முன்பும் கூனியை, ‘வெவ்விடம் அனையவள்’ (1452) என்றார். ‘வஞ்சி போலி’ என்பதைப் பெயராக ஆக்காது, ‘வஞ்சிக்கப்பட்டாய் போலும்’ என்று மந்தரை கூறியதாகவும் கொள்ளலாம். அடி மிசை வீழ்தல் காரியம் சாதிக்க விரும்புவார் செய்யும் போலி ஆகாரம் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though she heard those words, Mantarai did not draw back in fear;
  2. like poison that will not leave even when treated, and torments again:
  3. "My refuge! I will not stop telling you what is truly good for you,
  4. you who are like the vañci vine!" and falling at her feet she spoke on.

What the poem says

Mantarai is not frightened off. Like poison that returns after being treated, she comes back to the attack, this time falling at Kaikēyi's feet and calling her "my refuge", a show of humility meant to get her way.

"Like the vañci vine", a compliment to a slender woman, can also be read as "you seem to have been deceived". The next eight verses are her renewed argument.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añci mantarai akaṉṟilaḷ, am moḻi kēṭṭum;
nañcu tīrkkiṉum tīrkilātu atu nalinteṉṉa
`'tañcamē! uṉakku uṟu poruḷ uṇarttukai tavirēṉ;
vañci pōli!'' eṉṟu aṭimicai vīḻntu uraivaḻaṅkum.