கம்பராமாயணம் 1553 · அயோத்தியா 2.70

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறன் நிரம்பிய - அறவாழ்வுக்குரிய நற்குணங்களால் நிறைந்த; அருளுடை - கருணையுடைய; அருந்தவர்க்கேனும் - செய்தற்கு அரிய தவத்தைச் செய்த முனிவர்களுக்கும்; பெறல் அருந்திருப் பெற்ற பின் - பெறுதற்கு அரிய செல்வத்தைப் பெற்ற பிறகு; சிந்தனை பிறிது ஆம் - எண்ணம் வேறுபடும்; (ஆதலால் இராமன் கோசலை முதலோர் அரச பதவி பெற்றபிறகு) உமை - உங்களை; மறம் நினைந்து - கொல்லுதல் கருத; வலிகிலர் ஆயினும் - துன்புறுத்தாமல் விட்டாலும்; இறல் உறும்படி - (நீங்களாகவே) சாகும்படி; மனத்தால் இடையறா இன்னல் இயற்றுவர் - மனத்தால் கருதி இடையறாத துன்பத்தைச் செய்வார்கள்.

கோசலை முதலியோர் இன்றைக்கு உங்களிடம் நட்பாக இருப்பதுபோல் அரசபதவி பெற்றபிறகும் இருப்பார்கள் என்று கருதாதே, கருவியால் நேரே கொல்லாவிடினும், மனத்தால் துன்பத்தைச் செய்வர்; அது பொறாமல் நீங்களாகவே இறந்துபடுவீர்கள். செல்வம் பெற்றபின் சிந்தை வேறாவது முனிவர்க்கும் உள்ளது என்றால், சாமானியர்களாய இவர்கள் அதற்கு எம்மாத்திரம்? - என்பது கூனியின் வாதம். “என் சிறுவர் அறம் திறம்பலர்” “இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ” (1452, 1453) என்று கைகேயி கூறியதை அனுசரித்து, ‘இப்போது அப்படி நீ நினைக்கலாம், அரசன் ஆன பிறகு எப்படியோ’ என்று மறுத்து தன் கருத்தை வலியுறுத்தினாள். முன்னிரண்டு வரிகளின் செய்தியைப் பின்னிரண்டு வரிகள் பாதுகாத்து நிற்கின்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even for great ascetics full of dharma and compassion,
  2. once they have won rare fortune, their thinking changes;
  3. though they may not dare to plot your death outright, in their minds
  4. they will work unending torment until you are ready to die."

What the poem says

Mantarai answers Kaikēyi's trust in Irāmaṉ and Kōcalai. Power changes people, she says; even holy ascetics full of virtue think differently once they win great fortune, so what can be expected of ordinary mortals?

Kōcalai and her son may be friendly now, but once in power they will make life so miserable for Kaikēyi and Paratan that, without ever raising a weapon, they will drive them to their deaths.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṟaṉ nirampiya aruḷuṭai arun tavarkkēṉum,
peṟal arun tirup peṟṟapiṉ cintaṉai piṟitu ām;
maṟam niṉaintu umai valikilar āyiṉum, maṉattāl
iṟal uṟumpaṭi iyaṟṟuvar iṭaiyaṟā iṉṉal.'