கம்பராமாயணம் 1554 · அயோத்தியா 2.71

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'புரியும் தன் மகன் அரசு எனில் , பூதலம் எல்லாம்
விரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமையாம் என்றால் ,
பரியும் நின் குலப் புதல்வற்கும் , உனக்கும் , இப் பார் மேல்
உரியது என் , அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் ? '

பொருள் · Meaning in Tamil

தன் மகன் அரசு புரியும் எனின் - தன் புதல்வன் அரசாளுவான் ஆயின்; பூதலம் எல்லாம் - இப்பூமி முழுவதும்; விரியும் சிந்தனை - (பெற்றது போதாது என்று மேலும் பெறவேண்டும் என்று) அகன்று செல்லும் மனத்தை உடைய; கோசலைக்கு - கோசலா தேவிக்கு; உடைமை ஆம் - சொந்தமாகிவிடும்; என்றால்; நின்பரியும் குலப் புதல்வற்கும் - உன்னிடத்து அன்புடைய சிறந்த புத்திரனாகிய பரதனுக்கும்; நினக்கும் - உனக்கும்; இப்பார் மேல் - இப்பூமியில்; அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் - அந்தக் கோசலை கொடுத்த செல்வம் அல்லாமல்; உரியது என்? - சொந்தமாக இருப்பது என்ன?

“விரியும் சிந்தனை” என்பது இயல்பாகவே பேராசையால் விரிந்து செல்லும் மனம் உடைய கோசலை உனக்கு என்ன கொடுப்பாள் என்று கேட்பது போலப் பொருள்பட்டது. ‘பிறந்த சேயொடும் நீ துயர்ப்படுக’, ‘கரை செயற்கு அருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்’ என (1460, 1467) மேல் கூறியவற்றை இனி விவரிக்கின்றாள் எனலாம். இனி ஒரு பொருளும் உன் விருப்பின் படி பெறமுடியாது என்றாளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If her son is to rule, and the whole earth
  2. becomes the property of Kōcalai, whose wants keep spreading,
  3. then for your noble son who loves you, and for you, on this earth
  4. what will be yours, except whatever she chooses to give?"

What the poem says

Mantarai paints a picture of dependence. Once Irāmaṉ rules, the whole kingdom will in effect belong to Kōcalai, whom Mantarai portrays as greedy and always wanting more.

Kaikēyi and Paratan will own nothing except whatever Kōcalai chooses to hand them. This spells out her earlier warnings that mother and son would suffer and that Kaikēyi was sinking into a sea of sorrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'puriyum taṉ makaṉ aracu eṉiṉ, pūtalam ellām
viriyum cintaṉaik kōcalaikku uṭaimai ām eṉṟāl,
pariyum niṉ kulap putalvaṟkum, niṉakkum, ip pārmēl
uriyatu eṉ, avaḷ utaviya oru poruḷ allāl?'