கம்பராமாயணம் 1555 · அயோத்தியா 2.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூண்டும் - (தம்மைப் பிச்சை எடுக்க) ஏவுகின்ற; இன்னலும் - துன்பமும்; வறுமையும் -; தொடர்தர - தம்மைப் பின்பற்றிவர; ஈண்டு வந்து - நின் மனைக்கு வந்து; உனை இரந்தவர்க்கு - உன்னிடம் யாசித்தவர்களுக்கு; இருநிதி - மிக்க செல்வத்தை; அவளை வேண்டி - அந்தக் கோசலையைக் கேட்டு; ஈதியோ? - (வாங்கிக்) கொடுப்பாயா?; (அல்லது) வெள்குதியோ? - (அவளைக் கேட்க மனம் இல்லாமல்) நாணப்பட்டு நிற்பாயா?; விம்மல் நோயால் - (இந்த அவல நிலை நமக்கு உண்டாயிற்றே என்ற) துன்ப நோயினால்; மாண்டு போதியோ? - (இதைவிடச் சாவதே மேல் என்று) தற்கொலை செய்துகொள்வாயா? (அல்லது); மறுத்தியோ? - (இரந்தவர்களிடமே போய்) இல்லையென்று மறுப்பாயா?; எங்ஙனம் வாழ்தி? - எவ்வாறு வாழப்போகிறாய்?
‘புகழே’ சிறந்தது என்றாள் (1472) கைகேயி; அதனை இப்போது எடுத்துக்கொண்டு நீ புகழும் பெற இயலாது என்று சாடுகிறாள் கூனி. புகழ், கொடுப்பதனால் வருவது “உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்” (குறள் 232) அன்றோ? எனவே, உன்னிடம் வந்து இரந்தவர்களுக்கு நீ எவ்வாறு கொடுப்பாய்? என்று கேட்டாள். இராமன் அரசன்; கோசலை அவன் தாய்; உலகம் அவருடைமை; உனக்கு ஏது பொருள்? என்று கைகேயி மனத்தைக் கலக்கினாள். இரப்போர்க்கு ஈய முடியாத வழி இறந்துபடுதலே தக்கது ஆம் ஆதலின், ‘மறுத்தியோ மாண்டு போதியோ’ என்றாளாம். “சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை” (குறள் 230) என்பதை இங்குக் கருதுக. “இன்மை யுரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால் தன்மெய் துறப்பான் மலை” என்ற (கலி. 43: 26-27) கலித்தொகையும் இதுவே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "When those driven by hardship and poverty, pursued by distress,
- come here and beg of you, will you give them great riches
- by begging them from her? Will you shrink back in shame? Will you die
- of the sickness of grief? Will you turn them away? How will you live?"
What the poem says
Mantarai turns Kaikēyi's own words against her. Kaikēyi said that fame is all that matters; but fame, as the Tirukkuṟaḷ says, comes from giving to those in need.
When the poor come to Kaikēyi for help, where will she find the wealth? Will she go begging to Kōcalai, hang back in shame, die of grief, or turn the petitioners away? For a giver, being unable to give was thought worse than death.