கம்பராமாயணம் 1556 · அயோத்தியா 2.73

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சிந்தை செய்கையில் திகைத்தனை ; இனிச் சில நாளில் ,
தம் தம் இன்மையும் எளிமையும் நின்கொண்டு தவிர்க்க ,
உந்தை , உன்னை , உன் கிளைஞர் , மற்று உன் குலத்து உள்ளோர் ,
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ ? மதியாய் . '

பொருள் · Meaning in Tamil

மதியாய்! - அறிவுடையவளே!; என்செய - என்ன செய்யலாம் என்று கருதி; சிந்தை - (உன்) மனத்தில்; திகைத்தனை? - தடுமாற்றம் அடைந்தாய்; இனி - வருங்காலத்து; சில நாளில் - சில நாள்களில்; உந்தை - உன் தந்தை; உன் ஐ - உன் அண்ணன்; உன் கிளைஞர் - உன் பிறந்த வீட்டுக்கு உறவினர்கள்; மற்று - மேலும்; உன் குலத்து உள்ளோர் - உன் குலத்தைச் சேர்ந்தவர்கள் (ஆகியோர்); தம்தம் இன்மையும் - தங்கள் தங்களது வறுமையையும்; எளிமையையும் - தாழ்ச்சியையும்; நிற்கொண்டு - உன்னைக் கொண்டு; தவிர்க்க - போக்கிக் கொள்ளலாம் என்று; வந்து - இங்கே வந்து; காண்பது - (நீ அதற்கு முடியாமல் உள்ளபடியால்) பார்ப்பது; உன் மாற்றவள் செல்வமோ - உன் சக்களத்தியின் செல்வத்தையோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Not knowing what to do, your mind is in a daze; and soon, in a few days,
  2. hoping to be rid of their own poverty and lowliness through you,
  3. your father, your elder brother, your kinsmen and the others of your clan
  4. will come, and see what? Your rival's wealth? You who are so wise!"

What the poem says

Mantarai now plays on Kaikēyi's love for her own family. Her father, brother and relatives in Kēkayam will one day come to her in need, hoping that the queen of Ayōtti will help them.

What will they find? Only the wealth of her rival Kōcalai, since Kaikēyi will have none of her own to give. Calling her "wise" is bitter sarcasm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cintai eṉ ceyat tikaittaṉai; iṉi, cila nāḷil,
tamtam iṉmaiyum eḷimaiyum niṟkoṇṭu tavirkka,
untai, uṉ ai, uṉ kiḷaiñar, maṟṟa uṉ kulattu uḷḷōr,
vantu kāṇpatu uṉ māṟṟavaḷ celvamō? matiyāy.'