கம்பராமாயணம் 1557 · அயோத்தியா 2.74

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'காதல் உன் பெருங்கணவனை அஞ்சி , அக் கனி வாய்
சீதை தந்தை உன் தாதையைத் தெறுகிலன் ; இராமன்
மாதுலன் அவன் : உந்தைக்கு வாழ்வு இனி உண்டோ ?
பேதை உன் துணை யார் உளர் பழி படப் பிறந்தார் ? '

பொருள் · Meaning in Tamil

பேதை! - அறிவில்லாதவளே!; காதல் உன் பெருங்கணவனை அஞ்சி - உன்மேல் அளவிறந்த அன்புடைய உன் உயரிய நாயகனான தயரதனுக்குப் பயந்து; அக்கனி வாய்ச் சீதை தந்தை - அந்தக் கொவ்வைக் கனிபோலச் சிவந்த வாயையுடைய சீதையின் தந்தையாகிய சனகன்; உன் தாதையைத் தெறுகிலன் - உன்னுடைய தந்தையாகிய கேகய ராசன் மீது படையெடுத்து அழித்திலன்; அவன் இராமன் மாதுலன் - அந்தச் சனகன் இராமனுக்கு மாமன்; நுந்தைக்கு இனி வாழ்வு உண்டோ? - (இராமன் சக்கரவர்த்தியானால் சனகன் கை ஓங்கிவிடும்) உன் தந்தையாகிய கேகயனுக்கு இனி வாழ்வு உண்டா? (அழிவுதான்); உன்துணை - உன்னளவுக்கு; பழிபடப் பிறந்தார் யார் உளர்? - பழி உண்டாகும்படி பிறந்தவர்கள் யார் இருக்கின்றார்கள்? (ஒருவரும் இல்லை).

புகழ் இல்லாமற் போனாலும் போகட்டும் என்றால், பழியல்லவா உண்டாகும் போல் உள்ளதே என்றாள் கூனி. தசரதனுக்குக் கட்டுப்பட்டு சனகன் சும்மா இருக்கிறான்; எதிர்காலத்தில் இராமன் அரசனானால் சனகன் சும்மா இரான் என்றாள். சனகனுக்கும் கேகயனுக்கும் இயற்கையில் பகை உண்டு என்பதும் இதனால் விளங்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Out of fear of your great and loving husband, the father of red-lipped
  2. Cītai does not crush your father; but Irāmaṉ's
  3. father-in-law is he: will your father have any life left after this?
  4. Simpleton! Who else was ever born to bring such disgrace?"

What the poem says

Mantarai reveals an old enmity between Caṉakaṉ, Cītai's father, and Kaikēyi's father, the king of Kēkayam. For now Caṉakaṉ holds back out of fear of Tacarataṉ.

But once Irāmaṉ, Caṉakaṉ's son-in-law, is emperor, nothing will restrain him, and Kaikēyi's father will be destroyed. If Kaikēyi does not care about fame, Mantarai says, she should at least fear the disgrace of having brought ruin on her own father.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kātal uṉ peruṅ kaṇavaṉai añci ak, kaṉi vāyc
cītai tantai uṉ tātaiyait teṟukilaṉ; irāmaṉ
mātulaṉ avaṉ: nuntaikku vāḻvu iṉi uṇṭō?
pētai uṉtuṇai yār uḷar paḻipaṭap piṟantār?'