கம்பராமாயணம் 1558 · அயோத்தியா 2.75

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள ; மாற்றார்
செற்றபோது இவர் சென்று உதவார் எனில் , செருவில்
கொற்றம் என்பது ஒன்று எவ் வழி உண்டு ? அது கூறாய் ;
சுற்றமும் கெடச் சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய் . '

பொருள் · Meaning in Tamil

மற்றும் - மேற்சொல்லியதன்மேலும்; நுந்தைக்கு - உன் தந்தையாகிய கேகயனுக்கு; வான் பெரிது பகை உள - மிகப் பெரிய பகைகள் இருக்கின்றன; மறத்தார் - அப்பகைவர்கள்; செற்ற போது - (உன் தந்தையை அழிக்கப்) போரிட முனைந்தபோது; இவர் - கோசல நாட்டார்; சென்று உதவார் எனில் - (உன் தந்தைக்கு உதவியாகச்) சென்று போரில் உதவாவிட்டால்; செருவில் - சண்டையில்; கொற்றம் என்பது ஒன்று - வெற்றி என்பதாகிய ஒன்று; எவ்வழி உண்டு? - எப்படி எவ்விதத்தில் (உன் தந்தைக்கு) உண்டாகும்; அது கூறாய் - அந்த வழியைச் சொல்லு (ஆகவே); சுற்றமும் கெட - உறவின்முறையாரும் அழிய; சுடு துயர்க்கடல் விழ - சுடுகின்ற துன்பக் கடலில் (நீயும்) விழுவதற்கு; துணிந்தாய் - உறுதி கொண்டு விட்டாய் (போலும்).

இறுதி வரியை விளியாகவும் கொள்ளலாம். சனகன் போர் செய்யாவிடினும் வேறு அரசர்கள் உன் தந்தையோடு போர்செய்ய வரின் இராமன் உதவ வருவானோ? வாரான். எனவே, நீ உன் குலத்தையும் அழிக்க வழி செய்து கொண்டுள்ளாய் என்றாள் கூனி. கேகயனுக்குப் பகை மிகுதி உண்டு என்பதும் இதனால் போதரும். இவற்றால் உன் பெற்றோரைக் கருதியும் பரதனை அரசனாக்க வேண்டிய கட்டாயம் உனக்கு உளது என்றாளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Besides, your father has many great enemies; when those warriors
  2. attack him, if these people will not go to his aid, then in battle
  3. by what way can he ever win? Tell me that;
  4. you have resolved to fall into a burning sea of sorrow, and ruin your kin as well."

What the poem says

Mantarai continues: Kēkayam has other powerful enemies besides Caṉakaṉ. If they attack, will Irāmaṉ's Kōcalam send troops to help? Without such help, how can Kaikēyi's father hope to win?

By accepting Irāmaṉ's coronation, Mantarai claims, Kaikēyi is throwing herself into a sea of suffering and dragging her family down with her. For her parents' sake too, Paratan must be king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟṟum nuntaikku vāṉ pakai peritu uḷa; maṟattār
ceṟṟapōtu ivar ceṉṟu utavār eṉil, ceruvil
koṟṟam eṉpatu oṉṟu ev vaḻi uṇṭu? atu kūṟāy;
cuṟṟamum keṭac cuṭu tuyark kaṭal viḻat tuṇintāy.'