கம்பராமாயணம் 1561 · அயோத்தியா 2.78

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரக்கர் பாவமும் , அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க , நல் அருள் துறந்தனள் தூ மொழி மட மான் ;
இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ் உலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றனவே ?

பொருள் · Meaning in Tamil

அரக்கர் பாவமும் - இராக்கதர் (செய்த) தீவினையும்; அல்லவர் இயற்றிய அறமும் - தேவரும் முனிவரும் செய்த நல்வினையும்; துரக்க - (மறைந்து) ஏவுதலால்; நல் அருள் துறந்தனள் - நல்ல இரக்கத்தைக் கைவிட்டாள்; தூ மொழி மடமான் - தூய மொழிகளைப் பேசும் இளைய மான் போலும் கைகேயியின்; இரக்கம் இன்மை அன்றோ - கருணை இல்லாத தன்மையால் அல்லவா; இவ் உலகங்கள் - இந்த உலகம் எல்லாம்; இன்று - இன்றைக்கும்; இராமன் - இராமபிரானது; பரக்கும் - எங்கும் பரந்து செல்லும்; தொல்புகழ் அமுதினை - பழமையாகிய புகழ் என்கின்ற அமுதத்தை; பருகுகின்றதுவே - (செவிகளால்) உண்டு (ஆனந்தம் அடைகின்றது)!

கைகேயியின் மனமாற்றம் நிகழவில்லையானால் இராமாயண காவியம் தோன்றாதாம்; இராமன் புகழை அனுபவிக்க உலகத்திற்கு வாய்ப்பு இல்லையாம். கைகேயி மனம் திரிந்ததும் நல்லதாயிற்று. இராமன் புகழை உலகம் உண்டு பருகித் தேக்கெறிய உதவி செய்தது என்றார். புகழை அமுதென்றார் கேட்போர்க்குப் பிறவா நெறியாகிய பரமபதம் தந்து அருளுதலின். இங்கும் ‘அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்’ ஆகிய பெரிய காரணங்களே உள் நின்று தூமொழி மடமானை இரக்கம் அற்றவளாகச் செய்தது என்றது காண்க. கைகேயியால் அல்லவா சிறையிருந்தவள் ஏற்றம் செப்பும் ஸ்ரீராமகதை கிடைத்தது என்று தீமையிலும் நன்மை தோன்றக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Driven on by the sins of the demons and by the dharma done by those who are not demons,
  2. the pure-spoken young doe cast off her kindly grace;
  3. is it not through her lack of pity that today these worlds
  4. drink the nectar of Irāmaṉ's ancient, far-spreading fame?

What the poem says

The poet steps back to reflect. Kaikēyi abandons her compassion, impelled from within by the sins of the demons, which must now bear fruit, and by the merit of the gods and sages.

Yet her cruelty has a hidden blessing: had she not changed, there would be no Rāmāyaṇa, and the world would never have tasted the nectar of Irāmaṉ's fame, which grants liberation to those who hear it. Good comes out of evil.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arakkar pāvamum, allavar iyaṟṟiya aṟamum
turakka, nal aruḷ tuṟantaṉaḷ tū moḻi maṭamāṉ;
irakkam iṉmai aṉṟō iṉṟu iv ulakaṅkaḷ irāmaṉ
parakkum tol pukaḻ amutiṉaip parukukiṉṟatuvē?