கம்பராமாயணம் 1562 · அயோத்தியா 2.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனைய தன்மையள் ஆகிய - அப்படிப்பட்ட மனம் மாறின தன்மை உடையளாகிய; கேகயன் அன்னம் - கைகேயி; வினை நிரம்பிய கூனியை - சூழ்ச்சி நிறைந்தவளாகிய மந்தரையை; விரும்பினள் நோக்கி - விரும்பிப் பார்த்து; எனை உவந்தனை - என்னிடம் பிரியம் வைத்துள்ளாய்; (நீ) என் மகனுக்கும் இனியை - நீ என் மகனாய பரதனுக்கும் நல்லவளே; அனையான் - அந்தப் பரதன்; புனையும் நீள்முடி - அழகு செய்யப் பெற்ற உயர்ந்த முடியை; பெறும்படி - அடையும் விதத்தை; புகலுதி - சொல்லுக; என்றாள்.
எடுத்த காரியத்தை எப்படி முடிப்பது என்பதில் தேர்ந்தவள் கூனி. தன் முதுகில் உண்டையடித்தான் என்பதனால் வஞ்சம் கொண்டு பழி வாங்கும் உணர்வுடன் இராமனைக் காட்டுக்கு அனுப்புவதே அவள் நோக்கம்; பரதனைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை; ஆயினும் தன் நோக்கம் நிறைவேறக் கைகேயியையும் பரதனையும் கருவியாக அவள் பயன்படுத்திக்கொண்டாள். இதனை முடிக்கச் சதுரப்பாடான சொற்றிறமையும், கைகேயியின் பலவீனமும் எது என்பதறிந்து அவளைப் பயனுறுத்தி, பயமுறுத்தி மனம் மாறித் தன் கருத்திற்கிசையச் செய்து கொண்டதும் ஆகிய இவையே அவளை ‘வினை நிரம்பிய கூனி’ எனச் சொல்வதற்குப் போதுமானவை. இவ்விடத்தில், “தீவினை நிரம்பிய கூனி” என்ற பொருள் சிறக்குமேற் கொள்க. முன் ‘என் மகன் பரதன்’ (1471) என்றது போல இங்கே “என் மகன்” என்று கைகேயி கூறுவது காண்க. இனி, பரதனுக்கு அரசு பெறுமாறு எவ்வாறு? என்று அதற்குரிய வழி (உபாயம்) கூறுமாறு கூனியையே கேட்கிறாள் கைகேயி. கூனியின் கட்டுப்பாட்டில் கைகேயி வந்துவிட்டாள் என்பதை இது காட்டுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Now changed in this way, the swan of Kēkayam
- looked fondly at the hunchback, so full of schemes, and said:
- "You love me; you are good to my son as well; tell me how he
- may win the tall crown that is to be worn."
What the poem says
Kaikēyi, her mind now turned, looks at Mantarai with affection instead of anger. She thanks her for her loyalty to herself and to "my son", Paratan.
Then she asks Mantarai how Paratan can win the crown. The commentary notes that Mantarai cares little for Paratan; her real aim is revenge on Irāmaṉ. Kaikēyi, by asking her maid for a plan, has put herself in Mantarai's hands.