கம்பராமாயணம் 1563 · அயோத்தியா 2.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாழை ஒண் கணி - (பிளந்த) மாவடுவைப் போலும் ஒள்ளிய கண்களையுடைய கைகேயி; உரைசெய - (இவ்வாறு) சொல்ல; கேட்ட - அதுகேட்ட; மந்தரை - கூனி; என் தோழி வல்லள் - என் தோழி வல்லமையுடையவள்; என் துணை வல்லள் - என் உதவியாய தலைவி திறமைக்காரியே; என்று - எனச் சொல்லி; அடி தொழுதாள் - கைகேயி காலில் வணங்கினாள்; (பிறகு) மன் நிலை தாழும் - அரசனாகிய தயரதன் கொண்டுள்ள முடிவு தாழ்ச்சியடையும்; என் உரை தலைநிற்பின் - என் சொல்லை (நீ) உன்னுடைய தலைமேற்கொண்டு நிற்பதனால்; உன் ஒரு மகற்கு - உன்னுடைய ஒப்பற்ற மகனாகிய பரதனுக்கு; உலகம் ஏழும் ஏழும் ஆக்குவென் - பதினான்கு உலகங்களையும் உரிமையாகச் செய்வேன்; என்றாள் - என்று சொன்னாள்.
தன் கருத்துக்குக் கைகேயி உடன்பட்டமைபற்றிப் பாராட்டினாள். பிறகு தயரதனைக் கண்டோ வேறு காரணத்தாலோ மனம் மாறிவிடக் கூடாது என்பதற்காக, ‘என் உரை தலை நிற்பின்’ என்று ஆணையிட்டாள். மனம் மாறாத பொழுது கெஞ்சுவதும், மனம் மாறித் தன் வசம் ஆனபோது விஞ்சுவதும் இத்தகைய சூழ்ச்சியாளர் இயல்பேயாம். முழுமையாகக் கைகேயியைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து மேற் கூறுகின்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When she of bright eyes like split mango spoke so, Mantarai, hearing it, said, "My
- friend is clever! My mistress is clever!" and bowed at her feet;
- "The king's resolve will give way; if you hold to my word above all, the worlds,
- all seven and seven, I will make your one son's," she said.
What the poem says
Mantarai is delighted that Kaikēyi has come round, and bows at her feet, praising her as clever.
But she also makes a condition: Kaikēyi must follow her instructions to the letter, so that she does not weaken when she faces her husband. If she does, Mantarai promises, the king's decision will collapse, and all fourteen worlds will belong to Paratan. The schemer begs while her victim resists, and commands once she has won.