கம்பராமாயணம் 1564 · அயோத்தியா 2.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உள்ளமும் கோடிய கொடியாள் - உடம்பு வளைந்து கூனியானாற்போல உள்ளமும் கோணிப்போன கொடியவளாய மந்தரை; நளிர்மணி நகையாய்! - குளிர்ந்த முத்துமணியைப் போன்ற புன்சிரிப்பை உடையவளே!; உனக்கு -; ஒன்று நாடி உரைசெய்வென் - ஒரு செய்தியை ஆராய்ந்து சொல்லுகிறேன்; தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் - பூவிதழ் செறிந்த வெற்றிமாலை அணிந்த சம்பராசுரன்; தொலைவுற்ற வேலை - போரில் (தயரதன்பால்) தோல்வியுற்று அழிந்தபோது; ஆடல் வென்றியான் - விளையாட்டாகப் போரில் வெற்றி சூடும் தயரதன்; அருளிய - உனக்குக் கொடுத்த; வரம் அவை இரண்டும் - இரண்டு வரங்களாகிய அவற்றை; கோடி - (இப்போது அவனிடம்) கொள்வாயாக; என்றனள் - என்று (உபாயம்) கூறினாள்.
சம்பராசுர யுத்தத்தில் தயரதனுக்குத் தேர்ச்சாரதியாக இருந்தவள் கைகேயி. அப்போது ஓர் அபாயத்தில் தயரதனை மீட்டதற்கு அவன் உவந்து அவளுக்கு இரு வரம் பெறுக எனக் கொடுத்தான். அவள் வேண்டும்போது பெறுவதாகச் சொல்லி அப்போது கொள்ளாது அவ்வரங்களை விட்டாள்; அவற்றை அவன்பால் இப்போது கேட்டுப் பெறுக என்றாள் மந்தரை. “அருளிய” என்றதனால் தயரதன் தானே உள்ளமுவந்து தந்த வரங்கள், மறுக்க வொண்ணாதவை என்பது போதரும். “உள்ளமும்” என்ற உம்மை எச்சவும்மை; உடலேயன்றி எனலின் இறந்தது தழீஇய எச்சவும்மையாம். விளையாட்டுப் போல் வெற்றி பெறுபவன் என்பதனை ஆடல் வென்றியான் என்றார் - போர்த் தொழில் எளிது என்பது தோன்ற. இனி ஆடல் - போர்த் தொழிலில். வென்றியான் - வெற்றிசூடுபவன் எனவும் உரைக்கலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I have thought it through, and I will tell you one thing, lady whose smile is like cool pearls:
- when Camparaṉ of the petal-thick garland was destroyed,
- the two boons granted you by the king who wins his victories as if in play:
- claim them now," said the cruel one, whose mind was as bent as her back.
What the poem says
Mantarai reveals her plan. Long ago, in the war against the demon Camparaṉ, Kaikēyi drove Tacarataṉ's chariot and rescued him from danger. In gratitude he promised her two boons, which she chose to keep for later.
Now is the time to claim them. Because the king offered them freely, he cannot refuse. The poet adds that Mantarai's mind is as crooked as her hunched back.