கம்பராமாயணம் 1566 · அயோத்தியா 2.83

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உரைத்த கூனியை - (இவ்வுபாயம்) சொன்ன மந்தரையை; (கைகேயி) உவந்தனள் - மகிழ்ந்து; உயிர் உறத் தழுவி - இறுகத் தழுவிக் கொண்டு; மாமணி நிரைத்த ஆரமும் நிதியமும் நீட்டி - சிறந்த மணிக்கற்கள் வரிசையாக வைத்துச் செய்யப் பெற்ற மாலையும், ஏனைய செல்வங்களும் அளித்து; என் ஒரு மகற்கு - என் ஒப்பற்ற புதல்வனுக்கு; இரைத்த வேலை சூழ் உலகம் - ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்தை; ஈந்தாய் - கொடுத்தாய்; (ஆதலால்) இனி நீ தரைக்கு நாயகன் தாய் - இனிமேல் நீயே பூமிக்கரசனாகிய பரதனின் தாய் ஆவாய்; என - என்று; தணியா - தாழ்ந்து பாராட்டி; (தொடரும்).

பரதனுக்கு நான் பெற்ற தாய்; இன்று அரசை அவனுக்குப் பெற்றுத் தந்ததால் பரத அரசனுக்கு நீயே தாய் என்று கூனியைப் பாராட்டினாள். தழுவி, நீட்டி, தணியா என்ற வினையெச்சங்கள் அடுத்தபாட்டில் முடியும். தணிதல் - தாழ்தல். ‘தணியா’ என்பது ‘செய்யா’ என்னும் வாய்பாட்டில் வந்த வினையெச்சம். அது உடன்பாட்டுப் பொருளது. தணிந்து - தாழ்ந்து என்றாம். தன்னைத் தாழ்த்திக்கொண்டு தாயல்லள் என்று சொல்லி, அவளைத் தாய் என்று உயர்த்திப் பாராட்டினாளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She rejoiced in the hunchback who had said this, and hugged her close as her own life,
  2. and held out to her a necklace set with rows of great gems, and treasure besides:
  3. "You have given my one son the world ringed by the roaring sea!
  4. From now on you are the mother of the lord of the earth"; so, humbling herself,

What the poem says

Overjoyed with the plan, Kaikēyi hugs Mantarai and rewards her with a jewelled necklace and treasure, the very kind of gift Mantarai had thrown to the floor earlier.

She tells her that, since she has won the world for Paratan, she is now the true mother of the king; Kaikēyi only gave birth to him. The sentence continues into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uraitta kūṉiyai uvantaṉaḷ, uyir uṟat taḻuvi,
niraitta mā maṇi āramum nitiyamum nīṭṭi,
'iraitta vēlai cūḻ ulakam eṉ oru makaṟku īntāy!
taraikku nāyakaṉ tāy iṉi nī; eṉat taṇiyā.'