கம்பராமாயணம் 1567 · அயோத்தியா 2.84

Section அயோத்தியா காண்டம் / 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(நீ) நன்று சொல்லினை - நீ நல்ல உபாயம் சொன்னாய்; நம்பியை நளிர் முடி சூட்டல் - பரதனைச் செறிந்த மகுடத்தால் சூட்டுதலும்; இராமனைத் துன்று கானத்தில் துரத்தல் - இராமனை நெருங்கிய காட்டில் ஓட்டுதலும்; இவ் இரண்டும் - இந்த இரண்டும்; அன்றது ஆம் எனில் - அல்லாமல் போமாயின்; அரசன் முன் - சக்கரவர்த்தியாகிய தயரதன் எதிரில்; யான் ஆர் உயிர் துறந்து - நான் என்னுடைய பெறுதற்கரிய உயிரை விட்டு; பொன்றி - இறந்து; நீங்குதல் - இவ்வுலகை விட்டு நீங்குதலை; புரிவென் - செய்வேன்; நீ போதி - நீ போவாயாக; என்றாள் - என்று சொன்னாள்.

இவ்வாறு கைகேயி உரைத்தபடியால் இனி இவள் சிறிதும் மாறமாட்டாள் என்ற உறுதி மந்தரைக்கு உண்டாயிற்று. இவ் வாக்குறுதியைப் பெறவே “என் உரை தலை நிற்பின்” என்று (1486) முன்னர்க்கூனி கூறினாளாம். “இரண்டு வரங்களையும் பெறுவேன்; நாயகன் தராவிடின் நான் நமனுலகம் புகுவேன்” என்று உறுதி உரைத்தாள் கைகேயி. இனியும் கூனி தாமதிப்பின் அவளால்தான் நிகழ்ந்தது என்று ஐயுறும் ஆதலின் அவளை ‘நீ போதி’ என்று அப்புறப்படுத்தினாள். ‘தணியா’ என்ற முன்பாட்டின் வினையெச்சம் ‘என்றாள்’ என இங்கே முடிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Well said! To crown the prince with the cool crown,
  2. to drive Irāmaṉ into the dense forest: if these two
  3. do not come about, before the king I will give up my precious life
  4. and perish and be gone; now go," she said.

What the poem says

Kaikēyi swears an oath: either Paratan is crowned and Irāmaṉ is driven into the forest, or she will kill herself in front of the king.

This vow is exactly what Mantarai wanted when she told Kaikēyi to hold to her word. Kaikēyi then sends the maid away, so that no one will suspect that Mantarai was behind it. This ends the canto of Mantarai's plot; the next canto shows Kaikēyi carrying it out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṉṟu colliṉai! nampiyai naḷir muṭi cūṭṭal,
tuṉṟu kāṉattil irāmaṉait turattal, iv iraṇṭum
aṉṟatu ām eṉil, aracaṉ muṉ ār uyir tuṟantu
poṉṟi nīṅkutal puriveṉ yāṉ; pōti nī' eṉṟāḷ.