கம்பராமாயணம் 1568 · அயோத்தியா 3.1

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூனி போன பின் - தன் பணிப்பெண்ணாகிய மந்தரை விடை பெற்றுச் சென்ற பின்பு; குல மலர்க் குப்பை நின்று இழிந்தாள் - கைகேயி சிறந்த மலர்களின் குவியலால் ஆகிய படுக்கையிலிருந்து இறங்கி; சோனை வார் குழல் கற்றையில் - கருமேகம் போன்ற தன் நீண்ட கூந்தல் தொகுதியில்; சொருகிய மாலை - சூடியிருந்த பூ மாலையை; வான மா மழை நுழைதரு மதி - விண்ணிலே பெரிய கார்காலத்து மேகத்தில் நுழைந்திருக்கின்ற சந்திரனை; பிதிர்ப்பாள் போல் - இழுத்துச் சிதறவிப்பவள் போல; தேன் அவாவுறு வண்டு இனம் அலமர - பூவில் உள்ள தேனை விரும்பி மொய்க்கின்ற வண்டுக் கூட்டம் நிலைகெட்டுச் சுழலுமாறு; சிதைத்தாள் - கூந்தலிலிருந்து பிடுங்கிச் சிதைத்தெறிந்தாள்.

கூந்தலில் சொருகியிருந்த பூமாலையைக் கைகேயி எடுத்தெறிந்தது மேகத்தில் நுழைந்த சந்திரனைப் பிதிர்ப்பது போல இருந்தது; தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. குப்பை - தொகுதி. மலர்க்குப்பை - ஆகுபெயராய்ப் படுக்கையைக் குறித்தது. இழிந்தாள் - முற்றெச்சம். கூந்தலிருந்து மாலையை எடுத்தெறிந்தது அவளுக்கு ட்டு இருக்கும் அமங்கலத்தைக் குறிப்பாய்க் காட்டுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After the hunchback had gone, she climbed down from her heap of choice flowers;
  2. the garland tucked into the mass of her long hair, dark as rain clouds,
  3. as if she were tearing to pieces the moon that slips into a great rain cloud in the sky,
  4. she ripped apart, while the bees that craved its honey whirled in confusion.

What the poem says

The new canto, Kaikēyi's scheme, opens. Alone, Kaikēyi gets down from her bed of flowers and begins to undo her appearance, as an angry or grieving queen would.

She tears the garland from her dark hair. The poet imagines this as pulling apart the moon where it slips behind a dark cloud, while the bees that were feeding on the flowers circle in alarm. Throwing off her flowers also foreshadows the misfortune about to fall on her as a wife.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṉi pōṉa piṉ, kula malark kuppainiṉṟu iḻintāḷ;
cōṉai vār kuḻal kaṟṟaiyil corukiya mālai,
vāṉa vār maḻai nuḻaitaru mati pitirppāḷpōl,
tēṉ avāvuṟu vaṇṭiṉam alamarac citaittāḷ.