கம்பராமாயணம் 1569 · அயோத்தியா 3.2

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விளையும் தன் புகழ் வல்லியை வேர் அறுத்து என்ன ,
கிளை கொள் மேகலை சிந்தினள் ; கிண்கிணியோடும்
வளை துறந்தனள் ; மதியினில் மறுத் துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும் பெறல் திலதமும் அழித்தாள் .

பொருள் · Meaning in Tamil

விளையும் தன் புகழ் வல்லியை - வளரும் தன் புகழாகிய கொடியை; வேர் அறுத்தென்ன - வேரொடு அறுத்தாற் போல; கிளை கொள் மேகலை - ஒளியைக் கொண்ட மேகலாபரணத்தை; சிந்தினள் - அறுத்தெறிந்தாள்; கிண்கிணியோடும் வளை துறந்தனள் - பாதக் கிண்கிணியுடனே கை வளையல்களையும் கழற்றி நீக்கினாள்; மதியினில் மறு - சந்திரனிடத்தில் இருக்கும் களங்கத்தை; துடைப்பாள் போல - அகற்றுபவளைப் போல; அளக வாள் நுதல் - கூந்தலைச் சார்ந்து அமைந்துள்ள ஒளிபொருந்திய நெற்றியில் உள்ள; பெறல் அரும் திலகமும் - பெறுதற்கரிய திலகத்தையும்; அழித்தாள் - துடைத்தாள்.

மேகலையை அறுத்தெறிந்தது புகழை வேரொடும் அறுத்தது போலும் எனவும், நெற்றியில் திலகத்தை அழித்தது மதியின் மறுவைத் துடைத்தது போலும் எனவும் கூறினார். இவை தற்குறிப்பேற்றம். திலகத்தின் அருமை நோக்கி ‘அரும் பெறல்’ என்னும் அடை மொழி தந்தார். அறுத்தென்ன - தொகுத்தல் விகாரம். கிண்கிணி - காரணப் பெயர் கிண்கண் என ஒலித்தலான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if cutting off at the root the growing vine of her own fame,
  2. she scattered her many-stranded girdle; together with her anklet bells
  3. she cast off her bangles; as if wiping the stain from the moon,
  4. she rubbed away the precious mark on her bright brow beneath her curls.

What the poem says

Kaikēyi strips off her ornaments one by one. Snapping her jewelled girdle is like cutting her own fame off at the root, since this deed will ruin her good name for ever.

She removes her anklet bells and bangles, and wipes the auspicious mark from her forehead. Her brow without its mark is compared to the moon with its dark spot wiped away. These are the signs of a woman in mourning or in a rage, deliberately staged for her husband.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḷaiyum taṉ pukaḻ valliyai vēr aṟutteṉṉa,
kiḷai koḷ mēkalai cintiṉaḷ; kiṇkiṇiyōṭum
vaḷai tuṟantaṉaḷ; matiyiṉil maṟut tuṭaippāḷpōl
aḷaka vāḷ nutal arum peṟal tilakamum aḻittāḷ.