கம்பராமாயணம் 1570 · அயோத்தியா 3.3

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தா இல் மா மணிக் கலன் மற்றும் தனி தனி சிதறி ,
நாவி நன் குழல் நால் நிலம் தைவரப் பரப்பிக் ,
காவி உண் கண்கள் அஞ்சனம் கான்றிடக் கலுழாப் ,
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் , புவி மிசைப் புரண்டாள் .

பொருள் · Meaning in Tamil

மற்றும் தா இல் மா மணிக் கலன் - பின்னும் குற்றமற்ற பெரிய மணிகளால் ஆகிய அணிகளையும்; தனித்தனி சிதறி - வேறு வேறாகச் சிதைத்தெறிந்து; நாவி ஓதியை - புழுகுநெய் பூசப்பட்ட கூந்தலை; நால்நிலம் தைவரப் பரப்பி - தரையிலே புரளுமாறு பரப்பிக்கொண்டு; காவி உண்கண் - நீலமலர் போன்ற மையுண்ட கண்கள்; அஞ்சனம் கான்றிட - மைகரைந்து சிந்தும்படி; கலுழா - கண்ணீர்விட்டு அழுதுகொண்டு; பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என - மலர்களை யெல்லாம் உதிர்த்துவிட்ட ஒரு வெறுங்கொம்புபோல; புவிமிசைப் புரண்டாள் - தரைமேல் விழுந்து உருண்டாள்.

மங்கலப் பொருள்கள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு அழுத கைகேயியின் தோற்றம் பின்னே தான் அடையப் போகும் கைம்மை நிலையை இப்பொழுதே அவள் மேற்கொண்டதைக் குறிப்பாற் புலப்படுத்தியது. நானிலம் - ஈண்டு நால் வகை நிலத்தைச் சுட்டாமல் தரையைச் சுட்டியது. புவி - தரை. அணிகலன்கள் நீங்கிய நிலையில் மகளிர்க்குப் பூ உதிர்த்த கொம்பை உவமை கூறுவதை ஆறுசெல் படலத்தில்

“தாஅரு நாண் முதல் அணி அலால், தகை மே வரு கலங்களை வெறுத்த மேனியர், தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர், பூ உதிர் கொம்பு என, மகளிர் போயினர்” (2277)

என்னும் பாட்டிலும் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Scattering here and there her flawless jewels of great gems,
  2. spreading her musk-scented hair so that it swept the ground,
  3. weeping until her dark-lily eyes poured out their collyrium,
  4. like a branch that has shed all its flowers, she rolled upon the earth.

What the poem says

Kaikēyi, now resolved on Mantarai's plot, throws off every ornament and lies weeping on the floor of her chamber, waiting for Tacarataṉ.

Stripping away all auspicious adornment, she already takes on, without knowing it, the look of the widowhood that her scheme will bring her. A woman without her jewels is compared to a branch that has dropped its blossoms, an image the poet uses again later when the women of Ayōttī follow Irāmaṉ into the forest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tā il mā maṇik kalaṉ maṟṟum taṉit taṉi citaṟi,
nāvi ōtiyai nāṉilam taivarap parappi,
kāvi uṇ kaṇkaḷ añcaṉam kāṉṟiṭak kaluḻā,
pū utirntatu ōr kompu eṉap, puvimicaip puraṇṭāḷ.