கம்பராமாயணம் 1585 · அயோத்தியா 3.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆவி பதைப்ப - உயிர் பதைக்கும்படி; அலக்கண் எய்துகின்றான் - பெருந்துன்பத்தை உறுகின்ற தயரதன்; நிலத்தில் மேவி இருக்கும் - தரையில் (சிறிது பொழுது) பொருந்தி இருப்பான்; நிற்கும் - எழுந்து நிற்பான்; வீழும் - (மீண்டும்) விழுவான்; ஓவியம் ஒப்ப - சித்திரம் போல; உயிர்ப்பு அடங்கி ஓயும் - மூச்சு அடங்கி ஓய்வான்; பாவியை எதிர் உற்றுப் பற்றி - கைகேயியை எதிரே சென்று பிடித்து; எற்ற - மோத; எண்ணும் - நினைப்பான்.
இதனால் தயரதனது கலக்கநிலை உணர்த்தப்படுகிறது. இராமன்மீது இரக்கமின்றிக் கேடு சூழ்ந்தாளாதலின் கைகேயி பாவி என்று குறிக்கப்பட்டாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He sits upon the ground; he stands; he falls;
- like a painted figure he grows still, his breath stopped;
- he thinks of going up to the sinful woman, seizing her and striking her;
- so he suffers, his very life throbbing in torment.
What the poem says
Tacarataṉ's turmoil shows in restless, contradictory movements: he sits, rises, falls again, then freezes like a figure in a painting, hardly breathing. At moments he thinks of seizing Kaikēyi and dashing her down.
She is called 'the sinful woman' because she has pitilessly plotted harm against Irāmaṉ.