கம்பராமாயணம் 164 · பால 4.8

Section பால காண்டம் / 4. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆ வரும் வல் மை நேர் அறிந்து தீட்டல் ஆல்
மேவரும் கை அடை வேலும் தேயும் ஆல்;
கோ உடை நெடு மணி மகுட கோடியால்
சே அடி அணிந்த பொன் கழலும் தேயும் ஆல்.

பொருள் · Meaning in Tamil

யாவரும் வன்மை நேர் எறிந்து - எதிர்த்து வரும் எவருடைய வலிமைக்கும் ஈடுகொடுத்து நேருக்கு நேர் நின்று வெல்லும் போரை; தீட்டலால் - அடிக்கடி செய்வதால் ஓரமும், முனையும் மழுங்கி அவற்றை அடிக்கடி தீட்டுவதாலே; மேவரும் கையடை வேலும் தேயும் - விரும்புகின்ற கைவிடாப்படைகளான வேலும் வாளும் தேயும்; கோ உடை நெடு மணி மகுட கோடியால் - தன்னை வணங்கும் அரசர்களது நீண்டமணி மகுடவரிசையால்; சேவடி அடைந்தபொன் கழலும் தேயும் - தயரத மன்னனது கால்களில் பொருந்தியுள்ள பொன்னால் ஆகிய வீரக்கழல்களும் தேயும்.

தயரத மன்னனது போராற்றலும், மன்னர் பலரும் பணிந்து வணங்கும் பெருமையும் கூறப்பட்டது. கையடை - கைவிடாப்படை. அடிக்கடி போர் செய்வதால், மழுங்குகிறது. மீண்டும் கூர்மை ஆக்கத் தீட்டுவதால் தேய்கிறது என்பது கருத்து. சிற்றரசர்கள் பலரும் சேவடி தொழுதலால், அவர்களது மணிமுடிகள் உராய்ந்து பொற் கழல்தேய்கிறது என்கிறார். இனிப் பகைவரின்மையால் துருவேறி, கறை பிடிப்பதால் - அடிக்கடி தீட்டுதலால் தேயும் எனவும் கூறுவர். மகுட கோடி: மகுட வரிசை. வேலும் என்பது உபலட்சணத்தால் பிற கருவிகளையும் குறிக்கும். சேவடி: சிவந்த பாதங்கள். வேலும், கழலும் உம்மைகள் எண்ணுப்பொருள் உடையவை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because he meets the strength of all foes head-on and they must be whetted again,
  2. the spears that never leave his hand wear thin;
  3. and from the tips of the tall jewelled crowns of kings
  4. the golden anklets on his red feet wear thin too.

What the poem says

Two signs of Tacarataṉ's greatness. His weapons are used so often in battle, and sharpened so often after, that they wear down.

So many kings bow before him and touch his feet with their crowns that the gold anklets on his feet are rubbed thin. The commentary also gives an alternative reading: since he has no enemies left, the weapons rust and wear down from constant polishing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāvarum vaṉmai nēr eṟintu tīṭṭalāl
mē varum kai aṭai vēlum tēyumāl;
kōvuṭai neṭu maṇi makuṭa kōṭiyāl
cēvaṭi aṭainta poṉ kaḻalum tēyumāl.