கம்பராமாயணம் 163 · பால 4.7

Section பால காண்டம் / 4. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நேமி மால் வரை மதிலாக, நீள் புறப்
பாமம் மா கடல் கிடங்கு ஆகப், பல் மணி
வாமம் மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போன்றது ஏ.

பொருள் · Meaning in Tamil

நேமி மால்வரை மதில் ஆக - சக்கரவாளம் என்னும் பெயருடைய உலகைச் சூழ்ந்திருக்கும் பெருமலையே மதிலாகவும்; நீள்புறப் பாம மாகடல் கிடங்காக - நீண்ட, பரப்புடைய பெரும்புறக்கடல் என்னும் பெயருடைய கடலே அகழியாகவும்; மலைபல் மணிவாமம் மாளிகை ஆக - மலைகள் யாவும், பலவகை மணிகள் நிறைந்த அழகான மாளிகைகள் ஆகவும் இருந்தது; பூமியும் அயோத்தி மா நகரம் போலும் - நிலம் முழுவதுமே அப்பேரரசனது தலைநகரமாகிய அயோத்தி போன்றிருக்கிறது.

உலகம் முழுவதும் அவ்வேந்தனது செங்கோல் செல்லும் என்பது கருத்து. ‘சக்கரவாளகிரி’ என்பது உலகைச் சூழ்ந்திருக்கும் பெருமலை. அப்பெருமலையைச் சூழ்ந்திருக்கும் பெருங்கடல், பெரும்புறக்கடல் என்னும் பெயருடையது என்பது புராண நூல் கருத்து. மால்: மயக்கம். மால்வரை: பார்ப்பவரை வியப்பால் மயங்கச் செய்யும் மலையாகும். பாமம்: பரப்பு. வாமம்: அழகு. ஏ: அசை. அயோத்தி என்பது ஒருவராலும் வெல்ல இயலாதது என்னும் பொருள் உடைய வடமொழிப் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the great ring-mountain at the world's edge as its wall, with the vast
  2. wide ocean beyond as its moat, with the mountains as mansions
  3. lovely with many gems, for this king
  4. the whole earth is like the great city of Ayōttī.

What the poem says

Tacarataṉ's rule covers the whole earth, so the whole earth is his capital. The mythical mountain range that encircles the world is its city wall, the outermost ocean is its moat, and the mountains are its jewelled mansions.

The commentary notes that the name Ayōttī, Sanskrit Ayodhyā, means 'the unconquerable'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nēmi māl varai matil āka, nīḷ puṟap
pāma mā kaṭal kiṭaṅku āka, pal maṇi
vāma māḷikai malai āka, maṉṉaṟkup
pūmiyum ayōtti mā nakaram pōlumē.