கம்பராமாயணம் 162 · பால 4.6

Section பால காண்டம் / 4. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசியர்
உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன்
தள் அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல் வள் உறை அயில் மன்னர் மன்னன் ஏ

பொருள் · Meaning in Tamil

வள்உறை அயில் - தோலால் ஆன உறையை உடைய வேலைத் தாங்கிய; மன்னர் மன்னன் - அரசர்களுக் கெல்லாம் அரசனாகிய, தள்ள அரும் பெரும்புகழ் - நீக்க முடியாத பெரும் புகழ் படைத்த; தயரதப்பெயர் வள்ளல் - தயரதன் என்னும் பெயருடைய வள்ளல் ஆட்சியில்; வெள்ளமும், பறவையும் விலங்கும் வேசையர் உள்ளமும் - வெள்ளப் பெருக்கும், பறவைகளும், விலங்குகளும், விலைமாதர் உள்ளமும்; ஒருவழி ஓட நின்றவன் - ஒரேவழியில் தம் எல்லை கடவாது சென்றன. இவ்வாறு செய்து புகழில் நிலைத்து நின்றான்.

செங்கோலாட்சியால், அறம் தவறாது ஆண்டு வருபவன் தயரதச் சக்கரவர்த்தி என்பது கருத்து. வெள்ளம் ஒரு வழி ஓடுதலாவது மழை மிகுதியாகவும் பெய்யாது, குறைவாகவும் பெய்யாது அளவோடு பெய்வதால் வெள்ளமும் கரைகடவாது செல்லுதலாம்; பறவைகளும் விலங்குகளும் பகைமையின்றித்தமக்குரிய வாழ்விலே நின்றன. பலரை நாடிச் செல்லும் விலைமாதர் மனமும் ஒருவனையே அடைந்து விரும்பி இருக்கும். தயரதனது அறம் கடவாத ஆட்சியினால் இந்த அதிசயம் நிகழ்ந்தது என்கிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He kept flood waters, birds, beasts, and the hearts
  2. of harlots running in one course —
  3. that generous man named Tacarataṉ, of fame none can efface,
  4. king of kings, whose spear rests in a leather sheath.

What the poem says

Under Tacarataṉ's just rule everything keeps to its proper course. The rains are moderate, so rivers never break their banks. Birds and animals live without preying on one another.

Even courtesans, whose hearts usually wander from man to man, stay faithful to one. The spear sheathed in leather suggests a peace that needs no fighting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veḷḷamum paṟavaiyum vilaṅkum vēcaiyar
uḷḷamum oru vaḻi ōṭa niṉṟavaṉ
taḷḷa arum perum pukaḻt tayaratap peyar
vaḷḷal vaḷ uṟai ayil maṉṉar maṉṉaṉē