கம்பராமாயணம் 161 · பால 4.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இரப்போர்கடல் ஈந்தே கடந்தான் - அவ்வரசன், தன்னிடம் யாசிப்பவர்கள் என்னும் கடலை ‘ஈதல்’ என்னும் தெப்பம்கொண்டு கடந்தான்; அறிவு என்னும் அளக்கர் எண்ணில் நுண்நூல் ஆய்ந்தே கடந்தான் - அறிவு என்ற கடலை, எண்ணற்ற நுண்ணிய நூலாராய்ச்சி என்ற படகு கொண்டு தாண்டினான்; பகைவேலை வாளால் காய்ந்தே கடந்தான் - பகைவர்கள் என்ற கடலை, வாள் முதலிய படைத்துணை கொண்டு, கோபம்காட்டி நீந்தினான்; திருவின்தொடர் போகபௌவம் - செல்வ வளத்தாலே தொடர்ந்து வரும் இன்பம் என்னும் கடலை; கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் - மனம் நிறைவு பெறும்படி துய்த்தே கடந்தான்.
தயரதன், தன்னை நாடிவரும் யாசகர்களை முனியாது, கொடுத்து அனுப்பும் இயல்புடையவன். உயர்ந்த நூல்களைக் கற்றுத் தெளிந்த அறிவுடையவன். எத்துணைப் பகைவர் திரண்டு வரினும் வாள் கொண்டு, கோபம்காட்டி, வெல்லும் வீறுடையவன். உலக இன்பங்களை - மனம் நிறைவுறுமாறு, துய்த்து வாழ்ந்தவன் என்பது கருத்து. அளக்கர், வேலை, பௌவம் என்பன, கடல் என்னும் பொருள் கொண்ட ஒரு பொருட் பன்மொழி. பகை: சாதியொருமைப்பெயர், பகையரசை உணர்த்தும். இரப்போர்கடல், அறிவென்னும் அளக்கர், பகைவேலை, போக பௌவம் என்பன உருவகங்கள். போக பௌவம் இன்பக் கடல் என்று பொருள் கொண்ட வடமொழித் தொடர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He crossed the sea of beggars by giving; he crossed the ocean called knowledge
- by studying countless subtle treatises; with his sword
- he crossed the sea of enemies in his anger; and he crossed the ocean of pleasures
- that flows from wealth, steeping himself in it to his heart's content.
What the poem says
Four seas, each crossed by a different means. The endless crowd of supplicants he crossed by giving. The vast ocean of learning he crossed by study.
The sea of enemies he crossed with his sword. The ocean of royal pleasures he crossed by enjoying it fully. The verse rounds out the ideal king, who is generous, learned, valiant and fulfilled.