கம்பராமாயணம் 166 · பால 4.10

Section பால காண்டம் / 4. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பல் ஆல்,
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.

பொருள் · Meaning in Tamil

வயிர வான் பூண் அணி - வயிரம் இழைத்துச் செய்யப்பட்ட அழகிய அணிகலன்களை அணிந்துள்ள; மடங்கல் போல் மொய்ம்பினான் - சிங்கம் போன்று வலிமை உள்ள தயரத மன்னன்; உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால் - மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போலக் கருதிக் காத்துவருவதால்; செயிர் இலா உலகினில் - குற்றமில்லாத இப்பேருலகத்திலே; சென்று, நின்று வாழ்உயிரெலாம் - இயங்கியற் பொருள், நிலையிற் பொருள்களாக இருந்து வாழும் உயிரெல்லாம்; உறைவது ஓர் உடம்பு ஆயினன் - தங்கி வாழ்வதற்குத்தக்க பெருமைமிக்க உடம்பாகவும் ஆனான்.

தயரதன் அன்பாலும் அருளாலும் உயிர்கள் அனைத்தின் விருப்பம் நிறைவேற்றுகின்ற உடலாக மட்டுமே இருந்தான் என்னும் புதுக்கருத்தை கவிச்சக்கரவர்த்தி வெளியிடுகிறார். கம்பர் காலம் வரை இலக்கியங்கள் மன்னனை உயிர் எனவே கூற, கம்பன் மறுதலையான, புரட்சிகரமான இக்கருத்தை முதன் முறையாக வெளியிட்டுள்ளார்.

மடங்கல்: சிங்கம். “வயிரவான் பூண்” என்பதற்குத் தோளணியாகிய ‘வாகுவலயம்’ என்றும் கூறுவர். சென்று வாழ்உயிர், நின்றுவாழ் உயிர் எனக் கொண்டு சரம், அசரம் என்றிரண்டு வகை உயிர்களாகக்கொள்க. இது முதல் ஒன்று பாடல்களால் தயரதன் அரசு செய்யும் திறம் கூறப்படுகின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He of the lion's strength, adorned with bright diamond ornaments,
  2. cherished all lives as his own life, and so,
  3. in this faultless world, for all the lives that move and that stay still,
  4. he became the one body in which they dwell.

What the poem says

Earlier poets often called the king the life of his people. Kampaṉ reverses the image. Because Tacarataṉ protects every creature as he would his own life, he becomes the body in which all lives, moving and unmoving, make their home.

The commentary singles this out as a new and bold idea of kingship. The king serves as the vessel for his subjects' lives rather than ruling over them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vayira vāṉ pūṇ aṇi maṭaṅkal moympiṉāṉ
uyir elām taṉ uyir okka ōmpalāl,
ceyir ilā ulakiṉil ceṉṟu niṉṟu vāḻ
uyir elām uṟaivatu ōr uṭampu āyiṉāṉ.