கம்பராமாயணம் 167 · பால 4.11

Section பால காண்டம் / 4. அரசியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குன்று என உயரிய குவவுத் தோளினான்
வென்றி அம் திகிரி, வெம் பரிதி ஆம் என,
ஒன்று என, உலகு இடை உலாவி, மீ மிசை
நின்று நின்று, உயிர்தொறும் நெடிது காக்கும் ஏ.

பொருள் · Meaning in Tamil

குன்று என உயரிய - மலைபோலும் வளர்ந்து ஓங்கிய, குவவுத் தோளினான் - திரண்ட தோள்கள் கொண்ட தயரதனுடைய; வென்றி அம்திகிரி - வெற்றிமிக்க ஆணைச் சக்கரமானது; வெம்பருதி ஆம்என - வெம்மையுடைய சூரியனோ என்னும்படி; மீமிசை நின்று - மிக உயரமான வானிலே நின்றும்; ஒன்று என - ஒன்றாகிய பரம்பொருளைப் போல; உலகிடை உயிர்தொறும் உலாவி நின்று - உலகில் வாழும் சர, அசரங்களாகிய உயிர்கள் தோறும் உலாவி, நின்று; நெடிது காக்கும் - பெரிதும் காத்தல் தொழிலைச் செய்யும்.

பரம்பொருள் ஒன்றாக நின்று, உயிர்தொறும் உலாவி, நெடிது காத்தல் போல வென்றியம் திகிரி, பரிதியாமென நின்று காக்கும் என்பது கருத்து. குன்று: தோளின் திரட்சி உயர்ச்சியுண்மையாலும் உவமையாகும். ‘ஒன்றென’ என்பதற்கு, பொதுவறத் தனித்தே நின்று என, திகிரிக்கு ஏற்றிக் கூறினும் பொருந்தும்.

குன்றென, பருதியாம் என, ஒன்று என, என்றுவரும் ‘என’ என்பன உவமை உருபுகள். நெடிது: நீண்டகாலம் என்னும் பொருளும் கூறுதல் பொருந்தும். குவவுத் தோள்: திரண்டதோள். வெம்பருதி: வெப்பமும் ஒளியும் தரும் சூரியன். மீமிசை: மிகமேலே (மீமிசைச் சொல்). காக்குமே: என்பதில் ‘ஏ’ அசை. பருதிஆம்: பருதி ஆகும் (இடைக்குறை).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The victorious wheel of command of the king whose massed shoulders rise like hills,
  2. as if it were the burning sun,
  3. moves through the world like the One, and standing high above,
  4. stays in each and every life and guards it long.

What the poem says

The king's authority, pictured as a wheel of command, works like the sun: it shines from on high and reaches every creature.

It also works like the one Supreme Being, which is present in every living thing and sustains it. The phrase 'like the One' can also mean that the king's authority stands alone, without a rival.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṉṟeṉa uyariya kuvavut tōḷiṉāṉ
veṉṟiam tikiri, vem parutiyām eṉa,
oṉṟeṉa, ulakiṭai ulāvi, mīmicai
niṉṟu niṉṟu, uyirtoṟum neṭitu kākkumē.