கம்பராமாயணம் 177 · பால 5.9

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வடவரைக் குடுமியின் நடுவண் மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி, நான்முகக்
கடவுளை அடிதொழுது, அமரர், கண் நுதல்
உடையவன் அருளியது உரைத்திட்டார், அரோ.

பொருள் · Meaning in Tamil

வடவரைக் குடுமியின் நடுவண் - மேருமலையின் சிகரத்தின் மத்தியிலே; மாசு அறு சுடர்மணிமண்டபம் துன்னி - குற்றமற்ற ஒளிமிகுந்த மணிகளாலமைந்த மண்டபத்தை அடைந்து; நான்முகக் கடவுளை அடிதொழுது - (அங்கு வந்து சேர்ந்த) பிரமனை அடிவணங்கி; அமரகண்டகர் - தேவர்களுக்குப் பகைவர்களான அரக்கரது; இடிநிகர் வினையம் அது - இடிபோன்ற அக்கொடும் செயல்களை; இயம்பினான் - சொல்லலானான்.

வடவரை: மேருமலை. தேவர்கள் தன்னைக் காணவருவதை அறிந்த நான்முகன் மேருமலைச் சிகரத்தில் - மணிமண்டபத்தில் வந்து தங்கியிருந்தான். தேவர்கள் உடன்வர, சிவபெருமான் அங்குச் சென்று அரக்கர்தம் கொடுஞ்செயலைக் கூறினார் என்பது கருத்து.

மாசறு சுடர் மணிமண்டபம்: தேவர்கள் கூடி ஆலோசிக்கும் மண்டபம். கண்டகம்: முள். அரக்கர்கள் முள் போன்று துன்பம் விளைவிப்பவர் என்பதால் ‘கண்டகர்’ என்றார். வினை: செயல். ‘அம்’ சாரியை பெற்று ‘வினையம்’ என வந்தது. வரை: இருமடி யாகு பெயராய் மலையைக் குறித்தது. அரோ: அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming to the flawless hall of shining gems
  2. in the midst of the peak of the northern mountain, and bowing at the feet
  3. of the four-faced god, he told of the thunderbolt-like deeds
  4. of those thorns in the side of the gods.

What the poem says

The gods and Śiva reach a hall of jewels on the summit of Mount Meru, the northern mountain at the centre of the world. Brahmā, the four-faced creator, has come there to meet them.

Śiva tells him of the demons' terrible deeds. The demons are called thorns because they torment the gods the way a thorn pricks the flesh.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭavaraik kuṭumiyiṉ naṭuvaṇ mācu aṟu
cuṭar maṇi maṇṭapam tuṉṉi, nāṉmukak
kaṭavuḷai aṭi toḻutu, amara kaṇṭakar
iṭi nikar viṉaiyamatu iyampiṉāṉ arō.