கம்பராமாயணம் 1771 · அயோத்தியா 4.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உரைசெய் பெருமை - புகழப்படும் பெருமை உடைய; உயர் தவத்தோர் ஓங்கல் - உயர்ந்த முனிவர்களுக்கெல்லாம் மலைபோல உயர்ந்த வசிட்டன்; புரைசை மத களிற்றான் பொன் கோயில் முன்னர் - மணிகட்டிய கயிற்றை உடைய மத யானையை உடைய மன்னனது அரண்மனை முன்றிலில்; முரைசம் முழங்க - முரச வாத்தியம் ஒலிக்க; முடி சூட்ட மொய்த்து - இராமனுக்குப் பட்டாபிடேகம் செய்ய நெருங்க; ஆண்டு - அவ்விடத்தே; அரைசர்- மன்னர்கள்; இனிது இருந்த நல் அவையின் ஆயினான் - இனிமையாக வீற்றிருந்த நல்ல சபாமண்டபத்தை வந்து அடைந்தான்.
இராமனது முடிசூட்டு விழாவை முன்னிட்டு மன்னர்கள் நெருங்கியிருந்த அத்தாணி மண்டபத்துக்கு வசிட்டன் வந்து சேர்ந்தான். முன்பே அரசர்கள் கோசலையின் புலம்பல் கேட்டு “அவ் ஆறு அறிவாய்' என்ன முனிவன் வந்தவன் ஆதலின், (1639.) அவர்களுக்குச் செய்தி அறிவிக்கச் சென்று சேர்ந்தான் என்க. புரசை என்பது எதுகை நோக்கி 'புரைசை' என நின்றது. ட. இடும் கயிறு என்பது பொருள். முரசம் - முரைசம் போலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lofty mountain among the high ascetics, of greatness praised in speech,
- before the golden palace of him who owns rutting elephants with bell-ropes,
- where, as drums sounded, to crown the prince, the kings had thronged
- and sat at ease, came into that good assembly.
What the poem says
Vacittaṉ, towering among sages like a mountain, comes to the great hall before Tacarataṉ's palace, where the kings have gathered to the sound of drums for Irāmaṉ's coronation.
It was these kings who earlier heard Kōcalai's cries and sent him to find out what had happened, so he now returns to tell them. The commentary notes that puraicai, the rope with a bell tied round an elephant's neck, is lengthened from puracai for the rhyme, as muraicam is from muracam.