கம்பராமாயணம் 1772 · அயோத்தியா 4.90

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர் ,
'எந்தை புகுதற்கு இடையூறு உண்டாயது ஓ ?
அந்தம் இல் சோகத்து அழுதகுரல்தான் என் கொல் ?
சிந்தை தெளிந்தோய் ! தெளிவி ' எமக்கு என்று உரைத்தார் .

பொருள் · Meaning in Tamil

வாள் வேந்தர் - வாள் உடைய அரசர்; வந்த முனியை முகம் நோக்கி - வந்த வசிட்டனைப் பார்த்து; “சிந்தை தெளிந்தோய்! - மனம் தெளிந்த மாமுனிவனே; எந்தை! - எம் தந்தை போல்பவனே; புகுதற்கு இடையூறு உண்டாயதோ? - இராமன் முடிசூட்டு விழாவிற்கு வருதற்கு ஏதேனும் தடை உண்டாகியதா; அந்தம் இல் சோகத்து அழுத குரல்தான் என்ன? - முடிவில்லாத துன்பத்துடன் கூடிய அழுகையொலி எதனால் ஆகியது; எமக்கு ஈது தெரி” - எங்களுக்கு இதனைத் தெரிவிப்பாயாக; ' என்று உரைத்தார் -.

இங்கே 'எந்தை' என்பதை முனிவனை நோக்கிய விளியாக ஆக்காமல், தயரதன் என்றோ, “இராமன் என்றோ பொருள் உரைத்து, முடிசூட்டு விழாவிற்கு தயரதன் வந்து சேர' அல்லது “இராமன் வந்து சேர' தடை உண்டாகியதா என்று அரசர் வினாவியதாகக் கொள்வதும் நேரிய உரையேயாகும். முடி சூடிய பின்னர் இராமன் மன்னர் மன்னன் ஆகிவிடுவான் ஆதலின், அதுபற்றி அரசர் இராமனை “எம் தலைவன்” எனும் பொருளில் “எந்தை” என வழங்கல் முறையே ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking into the face of the sage who had come, the kings with swords
  2. said, 'Father, has some obstacle arisen to his coming in?
  3. What was that voice weeping in endless sorrow?
  4. You of clear mind! Make this known to us.'

What the poem says

The assembled kings ask Vacittaṉ what has happened: has something prevented the coronation from going ahead, and what was the sound of endless weeping they heard?

The commentary notes that 'father' may be addressed to the sage, or may refer to Tacarataṉ or to Irāmaṉ, whom the kings would soon acknowledge as their overlord, asking whether something has stopped him from arriving.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vanta muṉiyai mukam nōkki vāḷ vēntar,
'entai pukutaṟku iṭaiyūṟu uṇṭāyatō?
antam il cōkattu aḻuta kuraltāṉ eṉṉa
cintai teḷintōy! teri' emakku ītu eṉṟu uraittār.