கம்பராமாயணம் 1792 · அயோத்தியா 4.110

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கோதை வரி வில் குமரற் கொடுத்த நில
மாதை ஒருவர் புணர்வராம் ? வஞ்சித்த
பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்கும் ஏ
சீதை பிரியினும் தீராத் திரு ? ' என்பார் .

பொருள் · Meaning in Tamil

“கோதை வரிவில் குமரன் கொடுத்த நிலமாதை - வெற்றி மாலை சூடிய கட்டமைந்த கோதண்டத்தை உடைய இராமனுக்குப் பேரவையில் கொடுக்கப் பெற்ற நிலமகளை; ஒருவர் புணர்வார் - வேறு ஒருவர் (பரதன்) கூடுவார்; (அப்படிக் கூடினால்); சீதை பிரியினும் - சீதாபிராட்டி காடு சென்றாலும்; தீராத் திரு - தானும் காடு செல்லாமல் தங்கிவிட்ட செல்வமகள்; வஞ்சித்த பேதை - வஞ்சனை செய்த கைகேயியின்; சிறுவனை - மகனாகிய பரதனை; பார்த்துப் பின் நிற்குமே?” - பார்த்துக்கொண்டு ஏற்றுக்கொண்டு நிற்பாளா; ' என்பார்.

'ஆம்' உரையசை. “சீதை பிரியினும் தீராத் திரு என்பது சீதை இந்நகரத்தை விட்டுப் பிரிந்த அளவில் செல்வ மகளும் இந்நகரை விட்டுப் போய்விடுவாள் என்பது குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The Earth-lady given to the prince of the banded bow and garland,
  2. can another possess her? Would the Lady of fortune, who does not leave
  3. even if Cītai departs, stay here waiting on the son
  4. of that deceitful fool?' some said.

What the poem says

The people doubt that anyone else can possess the Earth, already given in open assembly to Irāmaṉ.

And even if the goddess of fortune stayed behind when Cītai left for the forest, would she stay to serve the son of the woman who deceived the king? The commentary reads the line to mean that when Cītai leaves the city, prosperity will leave with her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kōtai vari vil kumaraṟ koṭutta nila
mātai oruvar puṇarvārām? vañcitta
pētai ciṟuvaṉaip piṉ pārttu niṟkumē
cītai piriyiṉum tīrāt tiru?' eṉpār.