கம்பராமாயணம் 18 · பால 1.18

Section பால காண்டம் / 1. ஆற்றுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காத்த கால் மள்ளர் வெள்ளக் கலி பறை கறங்கக் கைபோய்ச்
சேத்த நீர்த் திவலை பொன்னும் முத்தொடு திரையின் வீசி,
நீத்தம் ஆன்று, அலைய ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு,
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்று ஏ!

பொருள் · Meaning in Tamil

மள்ளர் காத்த கால் - உழவர்கள் காத்துநின்ற கால்வாயில்; வெள்ளக் கலிப்பறை கறங்க - வெள்ளம் வருவதைத் தெரிவிக்கும் இணைப்பறை ஒலிக்க; கை போய் - ஒழுங்காகச் சென்று; சேர்த்த நீர்த்திவலை - திரண்ட நீர்த்திவலையும்; பொன்னும் முத்தும் - பொன்னும் முத்தும் ஆகியவைகளை; திரையின் வீச - அலைகளால் வீசி எறிந்து; நீத்தம் ஆன்று - வெள்ளம் பெருகியும்; அலைய ஆகி நிமிர்ந்து - அலைகளால் உயர்ந்தும்; பார் கிழிய நீண்டு - நிலம் கிழியும்படி நீளச் சென்று; கோத்த கால் ஒன்றின் ஒன்று - முறையாகத் தொடர்கின்ற ஒரு கால்வாயிலிருந்து மற்றொரு கால்வாயாக; குலம் எனப் பிரிந்தது - குலம் பல கிளைகளாகப் பிரிவது போல் பிரிந்து சென்றது, சரயு வெள்ளம்.

சரயு ஆறு பல வாய்க்கால்களாக அங்கங்கே பிரிந்து நீளப் பாய்ந்தது, ஒரே குலம் பல கிளைகளாகப் பிரிந்து நெடிது தொடர்ந்து வாழ்வது போன்றது இது. கால்வாய் ஒன்று பலவாகப் பிரியினும் உள்ளுறை நீர் ஒன்றே; உயிர்க்குலம் பல கிளைகளாகப் பிரிந்தாலும் உயிர் ஒன்றே. இக் கருத்து அடுத்த பாடலின் கற்பனையாக விரிகிறது. "குலம் ஒன்றில் அனேகம் பெயர் உற்பவித்தாற் போல ஆற்றில் கால்கள் பல பிரிந்தன" என்பது 'இராமாயணக் கருப்பொருள்' தரும் விளக்கம். (ஐயரவர்கள் நூலகப் பதிப்புக் காண்க.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the channels the farmers kept, as the loud flood-drum sounded, flowing on in order,
  2. it flung up gathered spray and gold and pearls upon its waves;
  3. the flood swelled, rose in waves, stretched on until the earth was cleft,
  4. and divided from one linked channel into the next, like a clan branching out.

What the poem says

The flood now enters the irrigation channels of the farmland. The farmers stand guard as drums announce the water's coming. The river's waves fling up spray along with gold and pearls, and the water cuts across the land and divides from channel to channel.

The poet compares this to a family or clan dividing into many branches over the generations. The channels are many but the water in them is one, just as the branches of a lineage share one life. This thought is developed further in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kātta kālmaḷḷar veḷḷak kalippaṟai kaṟaṅka, kaipōyc
cērtta nīrttivalai poṉṉum muttamum tiraiyiṉ vīci,
nīttam āṉṟu, alaiya āki nimirntu, pārkiḻiya nīṇṭu,
kōtta kāloṉṟiṉ oṉṟu kulam eṉappirintatu aṉṟē!