கம்பராமாயணம் 19 · பால 1.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கல்லிடைப் பிறந்து போந்து - இமய மலையில் தோன்றி அங்கிருந்து வந்து; கடலிடைக் கலந்த நீத்தம் - கடலிலே கலந்துவிட்ட சரயுவின் வெள்ளமானது; 'எல்லை இல் மறைகளாலும் - அளவிட முடியாத வேதங்களாலும்; இயம்ப அரும் பொருள் ஈது' என்ன - 'சொல்லுதற்கரிய பரம்பொருள் (போன்றது) இவ்வெள்ளம்' என்று கூறுவதற்கு ஏற்றபடி; தொல்லையில் ஒன்றே ஆகி - ஆதிமுதலில் ஒன்றாகவே இருந்து; துறைதொறும் - ஏரி குளம் முதலிய வெவ்வேறு இடங்களிலெல்லாம்; பரந்த - விரிந்த; சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயம் - ஆராய்ச்சியுடைய பல்வேறு சமயவாதிகள்; சொல்லும் பொருள்போல் - விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போல; பரந்தது - பரவியது.
பரம்பொருள் ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய, தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப் பரம்பொருளும் வெவ்வேறு நாம, ரூப பேதங்களாக விளங்குகிறது; அதுபோலவே வெள்ளநீரும் ஏரி, குளம், கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கிறது.
கல்: (இமய) மலை; இமயத்தை 'வடபெருங்கல்' என்று குறுங்கோழியூர் கிழார் (புறநா.17) குறிப்பர் மதுரைக் காஞ்சி (70) யிலும் இவ்வாட்சி காணலாம்.
வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளேநின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா.
எனத் தாயுமானவரும் (கல்லாலின் :25)
பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம் புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்க ஓங்கும் கங்கு கரை காணாத கடலே.
என இராமலிங்க வள்ளலாரும் (மகாதேவ மாலை 48) இதே கருத்தைப் பேணியிருத்தல் அறிந்து மகிழத்தக்கது. ஆற்று வெள்ளமும் கடல்பரப்பும் பொதுப் படிமங்களாக இப்பெருமக்களின் வாக்கிலே அமைவதை உணர்க. கம்பர்தம் சமய தத்துவங்களை உணர உதவும் பாடல்களில் இது மதிப்புமிக்க ஒரு பாடலாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Born among the rocks, the flood came down and mingled with the sea,
- so that one might say, 'This is the Being whom the endless Vedas cannot describe';
- one from the very beginning, yet spread out at every landing place,
- it spread like the One whom the many great faiths, with their deep reasoning, proclaim.
What the poem says
In one of Kampaṉ's most celebrated verses, the river becomes an image of God. The Sarayū is born in the Himalaya and ends in the sea. Along the way it is one water, yet it spreads into lakes, tanks and channels, each with its own name. In the same way the Supreme Being, whom even the Vedas cannot fully describe, is one. The many religions, each reasoning in its own way, name and picture that one Being differently.
Later Tamil mystics used the same picture. Tāyumāṉavar sees the many faiths as rivers merging in a silent ocean, and Irāmaliṅka Vaḷḷalār speaks of an ocean without shores into which all the river-like religions flow. The verse is a key to Kampaṉ's own religious outlook.