கம்பராமாயணம் 180 · பால 5.12

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திரை கெழு பயோததித் துயிலும் தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்,
கர கமலம் குவித்து இருந்த காலையில்,
பர கதி உணர்ந்தவர்க்கு உதவும் பண்ணவன்

பொருள் · Meaning in Tamil

திரை கெழு பயோததித் துயிலும் - அலைகள் கெழுமிய பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்; தெய்வ வான் மரகத மலையினை - தெய்வத்தன்மை பொருந்திய உயர்ந்த மரகதமலை போன்ற திருமாலை; நெஞ்சினால் வழுத்தி - மனத்தால் வணங்கித் துதித்து; கர கமலம் குவித்து - தாமரை போன்ற கைகளைக் கூப்பி; இருந்த காலையில் - (தியானித்து) இருந்தபோது; பரகதி உணர்ந்தவர்க்கு - மேலான கதியிது என உணர்ந்து துதிப்பவர்களுக்கு; உதவு பண்ணவன் - காலம் தாழ்த்தாது உதவும் திருமால்.

“வந்து தோன்றினான்” என்ற அடுத்த பாடல் தொடருடன் பொருள் முடிவு பெறும். கெழு: கெழுமுதல் (பெருகியிருத்தல்). பயம்: பால். உததி: கடல்; பயோததி: பாற்கடல். மரகதம்: பச்சை நிறமணி. மரகத மலை: பச்சை மாமலை போன்ற திருமாலை உணர்த்தும் உவமையாகு பெயர். பரகதி: மேலாம்துணை. பண்ணவன்: மெய்ஞ்ஞானியாம். நெஞ்சினால் வழுத்தல்: மனத்தால் துதித்தல். கரகமலம் குவித்தல்: கைகளால் தொழுதல். கரகமலம்: உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. praising in their hearts the divine, lofty emerald mountain
  2. who sleeps upon the wave-filled Ocean of Milk,
  3. and folding their lotus hands, they sat; and then
  4. the Lord who comes to the aid of those who know the highest goal —

What the poem says

The gods sit in meditation, hands folded in prayer, and fix their minds on Viṣṇu, who reclines on the Ocean of Milk like a mountain of emerald.

Viṣṇu always helps those who recognise him as their final refuge, and he answers at once. The sentence is completed in the next verse with 'came and appeared'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiraikeḻu payōtatit tuyilum teyvavāṉ
marakata malaiyiṉ vaḻutti neñciṉāl,
karakamalam kuvittu iruntu kālaiyil,
parakati uṇarntavarkku utavu paṇṇavaṉ