கம்பராமாயணம் 182 · பால 5.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கறைமிடற்று இறையும் - நீலகண்டனாகிய இறைவனும்; தாமரைச் செழும்தவிசு உவந்த அத்தேவும் - தாமரையாகிய செழித்த ஆசனத்தனை விரும்பி அமர்ந்திருக்கும் நான்முகனும்; அடிமிசை விழுந்தனர் - திருமாலின் திருவடிகளை வணங்கி; விண்ணுளோரொடும் - தேவர்களொடும்; எழுந்தனர் எதிர் சென்று - எழுந்தவர்களாகி, அங்குத் தோன்றிய திருமாலுக்கு எதிரே சென்று, அவரை; தொழும்தொறும் தொழும் தொறும் - துதித்துத் தொழும் போதெல்லாம்; களிதுளங்குவார் - மகிழ்ச்சியால் ஆடுவாராகி நின்றனர்.
சிவபெருமானும், நான்முகனும், தேவர்களும் திருமாலுக்கு எதிரே சென்று அடிதொழுது, துதித்து, தொழும் போதெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்து ஆடுவாராயினர் என்பது கருத்து. கறை: நஞ்சு. மிடறு: கண்டம். கறைமிடற்றிறை: சிவபிரான். தேவு: தெய்வம். அடிமிசை: மிசை ஏழனுருபு. துளங்கல்: அசைதல். இங்கு ஆடுதலைக் குறித்தது. இறை: ஈசன், தலைவன், மேம்பாடுடையவன் என்னும் பொருள் கொண்டது. கறைமிடற்றிறை என்பதற்கு மாறாகக் கடவுளர்க்கு இறை என்ற பாடமும் உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord with the dark-stained throat rose, and that god who delights
- in the rich lotus seat; and, going forward with the dwellers of heaven,
- they fell at his feet; and each time they worshipped,
- each time they worshipped, they trembled with joy.
What the poem says
At Viṣṇu's appearance, Śiva and Brahmā rise from their seats with all the gods. They go to meet him and fall at his feet.
They are so overjoyed that each time they bow in worship, they sway and almost dance with delight.