கம்பராமாயணம் 184 · பால 5.16

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள் நின்று, எம்பிரான்,
சென்னி வான் தடவு மண்டபம் அத்து சேர்ந்து, அரி
துன்னு பொன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான்.

பொருள் · Meaning in Tamil

பொன்வரை இழிவதோர் புயலின் பொற்பு உற - பொன் மலையாகிய மேருவிலிருந்து கீழே இறங்குகின்ற ஒரு மேகத்தின் அழகுதோன்ற, என்னை ஆள் உடையவன் தோள் நின்று - என்னை ஆளாக ஆட்கொண்டிருக்கும் கலுழனுடைய தோள்களில் இருந்து; வான்தடவும் சென்னி மண்டபத்தில் சேர்ந்து - ஆகாயமளாவிய சிகரத்தை உடைய அம் மண்டபத்தை அடைந்து; அரிதுன்னு பொற்பீடமேல் - சிங்கவடிவுடைய பொன் ஆசனத்தின் மேல்; எம்பிரான் பொலிந்து தோன்றினான் - எம்பெருமானாகிய திருமால் பொலிவுறத் தோன்றலானான்.

பெரிய திருவடி என்றழைக்கப்படும் திருமாலின் ஊர்தியான கருடனை “என்னை ஆளுடையவன்” என்று சிறப்பிக்கிறார். ‘பொன்வரை’ என்று கூறுவதால் கருடனது நிறமும் மேன்மையும் புலனாகும். அரிதுன்னு பொற்பீடம்: சிங்காதனம்.

‘தேவர்கள் இருந்த இடத்தில் வந்து காட்சிதந்த திருமால் கருடனது தோளிலிருந்து இறங்கி அம்மண்டபத்தே இடப்பட்ட சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்’ என்பது கருத்து. தோள்: பிடர். அரி: சிங்கம் (எல்லா மிருகங்களையும் அழிக்க வல்லது).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the beauty of a rain cloud descending from the golden mountain,
  2. our Lord, coming down from the shoulders of the one who rules me,
  3. entered the hall whose summit brushes the sky
  4. and appeared in splendour upon the golden lion throne.

What the poem says

Viṣṇu steps down from the shoulders of Karuṭaṉ, his eagle mount, and sits on a lion throne in the hall. He looks like a dark rain cloud descending from a golden mountain.

The poet speaks as a devotee here, calling Karuṭaṉ 'the one who rules me'. In Vaiṣṇava tradition Garuḍa is revered as Periya Tiruvaṭi, the great devotee.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉvarai iḻivatu ōr puyaliṉ poṟpu uṟa,
eṉṉai āḷ uṭaiyavaṉ tōḷniṉṟu, empirāṉ,
ceṉṉi vāṉ taṭavum maṇṭapattil cērntu, ari
tuṉṉu poṟ pīṭamēl polintu tōṉṟiṉāṉ.