கம்பராமாயணம் 1956 · அயோத்தியா 5.39

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னவள் கூறுவாள் , `'அரசர்க்கு அத்தையர்க்கு
என்னுடை வணக்கம் முன் இயம்பி , 'யான் உடைப்
பொன் நிறப் பூவையும் கிளியும் போற்றுக ' என்று
உன்னும் என் தங்கையர்க்கு உணர்த்துவாய் '' என்றாள் .

பொருள் · Meaning in Tamil

அன்னவள் - சீதை; கூறுவாள் - (சுமந்திரனிடம் செய்தி) சொல்லுவாளாக; “அரசர்க்கு, அத்தையர்க்கு - தசரதரிடத்தும் மாமியாரிடத்தும்; என்னுடை வணக்கம் முன் இயம்பி - எனது வணக்கத்தை முதலிற் சொல்லி (பிறகு); யான் உடை - என்னுடைய; பொன் நிறப் பூவையும் - பொன்னிறமான நாகணவாய்ப் புள்ளையும்; கிளியும் - கிளியையும், போற்றுக - பாதுகாக்க; என்று -; உன்னும் - என்னை நினைக்கின்ற, என் தங்கையர்க்கு - என் சகோதரிகளிடம்; உணர்த்துவாய்' - சொல்லுவாய்; ' என்றாள் -.

சீதையின் பேதைமைத் தன்மையை இவ் வார்த்தைகள் விளக்கி நின்று இத்தகைய குழந்தைத்தன்மையுடையாள் பின் வனம் புகுந்து எவ்வளவு உயர்ந்த மனவளர்ச்சியும் குண வளர்ச்சியும் பெற்றுத் திகழ்கிறாள் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. தங்கையர் - ஊர்மிளை, மாண்டவி, சுருத கீர்த்தி ஆகியோர் - இவர் ஜனகன் புதல்வியர். இலக்குவன், பரதன், சத்துருக்கனன் மனைவியர் ஆவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She said: 'First give my salutations to the king
  2. and to my mothers-in-law; then to my sisters, who think of me,
  3. say, "Take care of my golden myna
  4. and my parrot"; tell them that,' she said.

What the poem says

Cītai's only message, after her respects to the king and queens, is a request to her younger sisters, Ūrmiḷai, Māṇṭavi and Curutakīrtti, the wives of the other three princes, to look after her pet myna and parrot. Her childlike concern shows how innocent she still is, and makes her later growth in the forest all the more striking.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavaḷ kūṟuvāḷ, `'aracarkku attaiyarkku
eṉṉuṭaiya vaṇakkam muṉ iyampi, 'yāṉuṭaip
poṉ niṟap pūvaiyum kiḷiyum pōṟṟuka' eṉṟu
uṉṉum eṉ taṅkaiyarkku uṇarttuvāy'' eṉṟāḷ.