கம்பராமாயணம் 197 · பால 5.29

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அருள் தரு கமலக் கண்ணன் அருள் முறை, அலர் உளோனும்
இருள் தவிர் குலிசத்தானும் , அமரரும், இனையர் ஆகி
மருள் தரு வனத்தின், மண்ணின் வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் எவரும் தத்தம் உறை இடம் சென்று புக்கார்.

பொருள் · Meaning in Tamil

அருள்தரும் கமலக் கண்ணன் அருள்முறை - கருணைமிக்க தாமரைக் கண்ணனாகிய திருமால் அருள் செய்த முறைப்படியே; அலருளோனும் இருள்தருமிடற்றினோனும் - தாமரை மலரில் உறையும் பிரமனும் இருண்டமிடற்றை உடைய சிவபிரானும், அமரரும் இனையர் ஆகி - மற்றத் தேவர்களும் மேலே கூறிய முறைப்படி வடிவெடுத்தவராகி; மருள்தருவனத்தில் - இருண்ட காடுகளிலும்; மண்ணில் வானரராக வந்தார் - நிலத்திலும் குரங்குகளாக உருமாறி வந்துள்ளார்கள்; பொருள்தரும் இருவர் - எல்லோரும் பொருட்டாகக் கருதிப் போற்றும் பிரமன், சிவன் ஆகிய இருவரும்; தம்தம் உறைவிடம் சென்று புக்கார் - தங்கள் தங்கள் உறைவிடங்களுக்குச் சென்று சேர்ந்தார்கள்.

பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சை உண்டு, தேவர்களைக் காத்தபோது அந்த நஞ்சு மிடற்றிலே நின்றுவிட சிவபிரான் நீலகண்டனாயினான். அதனையே “இருள்தருமிடற்றினோன்” என்றார். பொருள்தரும்: குறிப்பிட்டுக் கூறத்தக்க இருவர் பிரமனும், சிவபிரானும் என்பதைக் குறித்தது. திருமால் அருளிய முறைப்படி தேவர்கள் யாவரும் வானரங்களாகித் தங்கள் இருப்பிடங்களை அடைந்தனர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. By the way of grace that the lotus-eyed One of grace had laid down, he who dwells on the flower,
  2. he whose throat is dark, and the gods, having taken such forms,
  3. came as monkeys into the bewildering forests and onto the earth;
  4. and the two great ones went back and entered their own abodes.

What the poem says

So it is done as Viṣṇu commanded. The gods take birth as monkeys in the dense forests of the earth.

Brahmā and Śiva, the two great gods, return to their own heavens. Śiva's dark throat recalls the poison he swallowed at the churning of the ocean. The flashback now ends, and the story returns to Vaciṭṭaṉ and Tacarataṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruḷ tarum kamalakkaṇṇaṉ aruḷmuṟai, alar uḷōṉum
iruḷ tarum miṭaṟṟiṉōṉum, amararum, iṉaiyar āki
maruḷ tarum vaṉattil, maṇṇil vāṉarar āki vantār;
poruḷtarum iruvar tamtam uṟaiviṭam ceṉṟupukkār.