கம்பராமாயணம் 1983 · அயோத்தியா 5.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முகில் வாய் - மேகத்திடத்து; மின் துடித்தால் என்ன - மின்னல் துடித்தது போல; மன்னவன் மார்பில் - தசரதன் மார்பில்; துவள்கின்றாள் - துயரத்தால் துவளும் கோசலை; “வடித்தாழ் கூந்தல் கேகயன் மாதே! - கை செய்து அழகுற்றுத் தொங்கி நீண்ட கூந்தலையுடைய கைகேயியே! - மதியாலே - உன் புத்தி வல்லமையால், வையம் பிடித்தாய் - அரசாட்சியைப் பிடித்துக் கொண்டாய்; பேராவரம் பெற்றனை - மாறுபட முடியாத வரத்தைப் பெற்றாய்; இன்னே - இப்போதே; மந்திரம் முடித்தாய் அன்றே” - உன் ஆலோசனையை நிறைவேற்றிக் கொண்டாய் அல்லவா; என்றாள் -
வடித்தல் - வாரிச் சீவி ஒழுங்குறுத்தல். நினைத்த காரியத்தை அவ்வண்ணமே, அப்பொழுதே நிறைவேற்றிக்கொண்ட கைகேயியின் புத்தி வன்மையைக் கூறி அவலிக்கிறாள் கோசலை. முகில்வாய் மின் - தசரதன் மார்பில் விழுந்து புரளும் கோசலை. தசரதனை இங்கே முகில் என்றபடியால் அவனும் இராமன் போன்று கார் மேனியன் ஆதல் வேண்டும் என அறியலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Daughter of the Kēkaya king, with long, combed, hanging hair! By your cleverness
- you have seized the land, you have won a boon that cannot be undone, and now
- you have brought your plan to its end, have you not?" she said, and, like lightning
- quivering in a cloud, she writhed upon the king's breast.
What the poem says
Kōcalai addresses Kaikēyi bitterly, praising her shrewdness: she has taken the kingdom, obtained an irrevocable boon, and seen her scheme fulfilled at once, since the king's death completes what her demand began.
The queen tossing on her dead husband's chest is likened to lightning flickering in a dark cloud. Because the king is the cloud here, the image suggests that Tacarataṉ, like his son Irāmaṉ, was dark of complexion.