கம்பராமாயணம் 1984 · அயோத்தியா 5.67

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அருந்தேரானைச் சம்பரனைப் பண்டு அமர் வென்றாய் !
இருந்தார் வானோர் நின் அருளாலே , இனிது , அன்னார்
விருந்து ஆகின்றாய் ! என்றனள் ; வேழம் அத்து அரசு ஒன்றைப்
பெருந்தாள் அன்பின் சூழ் பிடி என்னப் பிரிவு உற்றாள் .

பொருள் · Meaning in Tamil

வேழத்து அரசு ஒன்றை - ஓர் அரச யானையை; பெருந்தாள் அன்பின் சூழ் பிடி என்ன - பெரிய காலில் அன்பினால் சுற்றிக் கிடக்கும் பெண் யானை போல; பிணி உற்றாள் - நோய் உற்றவளாகிய கோசலை (தயரதனை நோக்கி); “அருந் தேரான் அச்சம்பரனை - வெல்லுதற்கரிய தேரில் வந்த சம்பரனை; பண்டு - முற்காலத்து; அமர் வென்றாய் - போரில் வெற்றி கொண்டாய்; வானோர் - தேவர்கள்; நின் அருளாலே இனிது இருந்தார் - உன் கருணையால் இனிமையாக இருந்தார்கள்; அன்னார் - அவர்களது; விருந்து ஆகின்றாய்” - விருந்தினனாகத் தற்போது ஆகின்றாய்; என்றனள் -

போர் செய்யச் சென்ற சம்பரனைப் போரில் வெல்லமாட்டாத இந்திரன் தசரதன் துணையை வேண்ட, அதன் பொருட்டுத் தசரதன் சென்று வென்று இந்திரனுக்கு அமராவதி அரசைக் காத்தளித்த செய்தி, பாலகாண்டம் கையடைப் படலத்து விசுவாமித்திர முனிவன் தசரதனை நோக்கிக் கூறும் ஒன்பதாம் பாடலால் அறியலாம். (322.) யானையைக் கால் தழுவி வருந்தும் பிடி தயரதன் காலைச் சூழ்ந்து வருந்தும் கோசலைக்கு உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Long ago in battle you defeated that Camparaṉ of the invincible chariot!
  2. Through your grace the gods lived in comfort, and now
  3. you go to be their guest!" she said, and, like a cow elephant that lovingly
  4. wraps itself around the great leg of a royal tusker, she lay stricken.

What the poem says

Kōcalai recalls Tacarataṉ's greatest exploit: when Intiraṉ, king of the gods, could not overcome the demon Camparaṉ, Tacarataṉ fought and defeated him and secured Intiraṉ's throne. Vicuvāmittiraṉ mentions this in the Bāla Kāṇṭam. The gods who lived happily through his help will now receive him as a guest in heaven, that is, he has died.

She clings to her husband's feet as a female elephant twines herself around the leg of her mate.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'arun tērāṉ ac camparaṉaip paṇṭu amar veṉṟāy!
iruntār vāṉōr niṉ aruḷālē, iṉitu, aṉṉār
viruntu ākiṉṟāy! eṉṟaṉaḷ; vēḻattu aracu oṉṟaip
perun tāḷ aṉpiṉ cūḻ piṭi eṉṉap piṇiyuṟṟāḷ.