கம்பராமாயணம் 201 · பால 5.33

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வரு கலை பிறவும், நீதி மனுநெறி, வரம்பு இல் வாய்மை
தருகலை, மறையும், எண்ணில், சதுமுகற்கு உவமை சான்றோன்,
திருகலை உடைய இந்தச் செகம் அத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும்.

பொருள் · Meaning in Tamil

வருகலை பிறவும் - வளர்ந்த கல்வியாலும் கேள்வி முதலிய பிறவற்றாலும்; நீதி மனுநெறிவரம்பும் - நீதியைக் கூறும்மனு நூல் வரம்பாலும்; வாய்மைதரு கலைமறையும் - உண்மையை உணர்த்தும் வேதங்களை ஓதி யுணர்ந்ததாலும்; எண்ணின் சது முகற்கு உவமை சான்றோன் - நினைத்துப் பார்த்தால் நான்முகனுக்கு ஒப்பாகிய பெருமை உடையவனும்; திருகலை உடைய இந்தச் செகத்துளோர் தன்மை தேரா - பலவித மாறுபட்ட இயற்கையை உடைய உலகத்தவரின் தன்மையை அறியாதவனும்; ஒருகலை முகச்சிருங்க உயர்தவன் வருதல் வேண்டும் - கலைமான் கொம்பு போன்ற கொம்பை முகத்தில் உடையவனுமான சிருங்கன் என்னும் பெயருடைய உயர்ந்த தவத்தை உடைய முனிவன் வரவேண்டும்.

கல்விகேள்விகளில் சிறந்தவன், மனுநூல் வரம்பை அறிந்தவன், வேதங்களைக் கற்றறிந்தவன், நான்முகனுடன் ஒப்பிடத்தக்க சான்றோன், பலவித மாறுபாடுகளை உடைய உலக மக்களின் தன்மையை அறியாதவன், ‘சிருங்கி’ என்ற பெயர்கொண்டவன், உயர்ந்த தவமுனிவன் (வேள்வியை நடத்த) இங்கு வரவேண்டும் என்றான் வசிட்டன் என்பது பாட்டின் கருத்து.

வருகலை: வளர்கலை. பிறவும்: கேள்வியறிவு. மறை: வேதம். திருகல்: மயக்கம், மாறுபாடு. கலைமுகச் சிருங்கன்: கலைக்கோட்டு முனிவன். மான் கொம்பு போன்ற கொம்பு உடையவன் (நெற்றியில்). வருகலை, தருகலை, உயர்தவன்: வினைத் தொகைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '— who, in growing learning and all else, in the bounds of Manu's law of justice,
  2. and in the Vedas that teach the truth, is, if one weighs it, the equal of the Four-faced One,
  3. and who knows nothing of the ways of the people of this twisted world —
  4. that sage of high penance with a single deer's horn on his face must come.'

What the poem says

The sage who must come is Kalaikkōṭṭu Muṉi, Ṛṣyaśṛṅga in Sanskrit, 'the deer-horned sage', so called because he has a single horn like an antelope's on his brow.

He is as learned as Brahmā in scripture and law. Yet, raised in the forest, he is completely innocent of the crooked ways of the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'varu kalai piṟavum, nīti maṉuneṟi, varampum vāymai
taru kalai, maṟaiyum, eṇṇiṉ, catumukaṟku uvamai cāṉṟōṉ,
tirukalai uṭaiya intac cekattu uḷōr taṉmai tērā
oru kalai mukac ciruṅka uyar tavaṉ varutal vēṇṭum.