கம்பராமாயணம் 202 · பால 5.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாந்தளின் மகுடகோடி பரித்த - பாம்பினது பல தலைகளாலும் தாங்கப் பெற்ற; பார் அதனில் வைகும் மாந்தர்கள் - இவ்வுலகிலே வாழும் மனிதரை; விலங்கு என்று உன்னும் மனத்தன் - மிருகங்கள் என நினைக்கும் மனத்தை உடையவனும்; மாதவத்தன் - சிறந்த பெருந்தவம் உடையவனும்; எண்ணின் - எண்ணிப் பார்த்தால்; பூந்தவிசு உகந்து உளோனும் - தாமரை ஆசனத்தை விரும்பி அதில் அமர்ந்துள்ள பிரமனும்; புராரியும் புகழ்தற் கொத்த சாந்தனால் - திரிபுரத்தை அழித்த சிவனும் புகழத்தக்க பொறையாளனுமான அக்கலைக்கோட்டு முனிவனாலே; வேள்வி முற்றின் தனையர்கள் உளர்ஆம் என்றான் - மகப் பேறளிக்கும் வேள்வியை நிறைவேற்றினால் புத்திரர்கள் உண்டாவார்கள் என்றான்.
பாந்தள்: பாம்பு. இங்கு ஆதி சேடனைக் குறிக்கும். மகுடகோடி: கோடி என்பது ‘பல’ என்ற பொருள் தந்து நின்றது. பரித்த: தாங்கிய. உலகியல் அறிவு இன்மையால் பிற மாந்தரை விலங்குகள் எனக் கருதும் தவ முனிவனும் பிரமனும், சிவனும் புகழத்தக்க பெருமை உடையவனுமான அம் முனிவனைக் கொண்டு வேள்வியை நிறைவேற்றினால் மக்கட் பேறு வாய்க்கும் என்றான் வசிட்டன் என்பது பாடற்கருத்தாம். பூந்தவிசு: தாமரை ஆசனம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He thinks the people who live on this earth, borne up
- on the many crowned heads of the serpent, are mere beasts; he is a man of great penance; if you consider it,
- he is fit to be praised by him who delights in the flower seat and by the Destroyer of the Cities;
- if the sacrifice is completed by that serene one, there will be sons,' he said.
What the poem says
Vaciṭṭaṉ finishes his description. The horned sage has lived apart from society for so long that he regards ordinary people as no better than animals, yet his austerity wins praise from Brahmā and Śiva alike.
If this calm and holy man performs the sacrifice, Tacarataṉ will have sons. The earth is described as resting on the hoods of the cosmic serpent.