கம்பராமாயணம் 203 · பால 5.35

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய
பூங் கழல் தொழுது வாழ்த்திப் பூதலம் மன்னர் மன்னன்,
'தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான்?
ஈங்கு நான் கொணரும் தன்மை இயம்புதி, இறைவ!' என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஆங்கு இனைய உரை கூறும் - அப்போது, இத்தகைய நல்லுரை கூறிய; அருந்தவர்க்கு அரசன் - அரிய தவத்தினர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் வசிட்ட முனிவனது; செய்ய பூங்கழல் தொழுது வாழ்த்தி - அழகிய பாத மலர்களை வணங்கிப் போற்றி; பூதல மன்னர் மன்னன் - உலகத்து அரசர்க்கெல்லாம் அரசனான தயரதன்; தீங்கறு குணத்தால் மிக்க செழுந்தவன் - குற்றமற்ற, நற்குணங்களால் உயர்ந்த செழுமைமிக்க அந்தத் தவமுனிவன்; யாண்டை உள்ளான் - எங்கிருக்கிறான்?; ஈங்கு யான் கொணரும் - இங்கு நான் அம்முனிவனை அழைத்துக் கொண்டு வரும் விதத்தை; இறைவ! அருளுதி என்றான் - எனக்குத் தெய்வம் போன்றவனே! அருளிச் செய்வாயாக என்றான்.

உரை: சொல்லாகு பெயர். செய்ய: செம்மை என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். பூ: அழகு. கழல்: தனியாகு பெயர். அறு குணம்: வினைத் தொகை. ‘யாண்டை’ யாண்டு என்பது ஐகாரச் சாரியை பெற்றது. தனது குலகுருவான வசிட்டனை, தொழு குலமாகக் கருதி ‘இறைவ’ எனத் தயரதன் அழைத்தான். செழுமை-தவம்: செழுந்தவம் உயர்ந்த தவம் என்னும் பொருள் உடையது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the king of great ascetics had spoken these words there,
  2. the king of the kings of the earth bowed to his lovely red feet, praised him, and said:
  3. 'Where is that rich ascetic, great in faultless virtue?
  4. Lord, graciously tell me how I may bring him here.'

What the poem says

Tacarataṉ bows again to Vaciṭṭaṉ, whom he calls 'Lord' as one would a god, and asks two practical questions: where is this sage, and how can he be brought to Ayōttī?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṅkurai iṉaiya kūṟum arun tavarkku aracaṉ ceyya
pūṅ kaḻal toḻutu vāḻtti, pūtala maṉṉarmaṉṉaṉ,
'tīṅku aṟu kuṇattāl mikka ceḻun tavaṉ yāṇṭai uḷḷāṉ?
īṅku yāṉ koṇarum taṉmai aruḷuti, iṟaiva!' eṉṟāṉ.