கம்பராமாயணம் 204 · பால 5.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புத்தான கொடுவினை யோடு - புற்றுப் போலப் பெருகும் கொடிய வினைகளும் அவற்றால் விளையும், அருந்துயர் போய் ஒளிப்ப - அரிய துன்பங்களும் சென்று நீங்க; புவனம் தாங்கும் - நாட்டைக் காத்து ஆட்சி புரியும்; சத்தான குணம் உடையோன் - மிக உண்மையான குணம் உடையவனும்; தயையினொடும் தண்ணளியின் சாலை போல்வான் - தயைக்கும் தண்ணளிக்கும் இருப்பிடம் போன்றவனும்; எத்தானும் வெலற்கு அரியான் - எம்முறையிலும் பகைவரால் வெல்ல அரியவனும்; மனு குலத்தே வந்து உதித்தோன் - மனுவின் குலத்தில் பிறந்தவனும் ஆன; இலங்கும் மோலி உத்தான பாதன் - விளங்கும் மணிமுடி தரித்த உத்தான பாதன் என்னுமரசன்; அருள் உரோம பதன் என்று - பெற்ற மகனான உரோம பதன் என்னும் பெயர் பெற்ற; இவ்வுலகை ஆள்வோன் உளன் - இவ்வுலகத்தை எல்லாம் ஆள்கின்ற அரசன் ஒருவன் இருக்கிறான்.
இது முதல் 21 பாடல்கள் உரோமபத மன்னன் வரலாறு கூறுவனவாம். புத்து: புற்று (புத்தான: புற்றாக வளர்ந்து பெருகியுள்ள). கொடுவினை: கொடிய வினையாம். சத்: உண்மை. சாலை: வழித்தடம். மோலி: மகுடம். குணமுடையோன், சாலை போல்வான், வெலற்கரியான், வந்துதித்தோன் இவை உத்தான பாதனுக்கு அடைமொழிகள். உத்தான பாதன் மகன் உரோம பதன் ஆவான். மனுகுலம்: சுவாயம்பு மனுவின் குலம். கொடு வினை: பண்புத்தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'So that grievous deeds swollen like an anthill and the hard sorrows they bring may vanish, there is one who rules this world:
- he of true goodness who upholds the land, who is like a dwelling-place of kindness and gentle grace,
- whom none can conquer by any means, born in the line of Manu,
- the son of Uttāṉapātaṉ of the shining crown — he is called Urōmapataṉ.'
What the poem says
Vaciṭṭaṉ starts the story of how the horned sage came out of the forest. It centres on King Urōmapataṉ (Romapāda), son of Uttāṉapātaṉ and a descendant of Manu.
He is a just and compassionate ruler who cannot be defeated, and his rule drives away sin and suffering. This begins a group of about twenty verses telling his story.