கம்பராமாயணம் 205 · பால 5.37

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னவன் தான் புரந்து அளிக்கும் திருநாட்டில் நெடு காலம் அளவு அது ஆக
மின்னி எழும் முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும், வேந்தன், நல் நூல்
மன்னும் முனிவரை அழைத்து, மா தானம் கொடுக்கினும் வான் வழங்காது ஆகப்,
பின்னும் முனிவரர்க் கேட்பக், 'கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும்' என்றார்.

பொருள் · Meaning in Tamil

அன்னவன் தான் புரந்தளிக்கும் திரு நாட்டில் - அந்த உரோமபத மன்னன் காத்து ஆட்சி புரியும் அந்தச் சிறந்த நாட்டில், நெடுங்காலம் அளவதாக மின்னி எழும் முகில் இன்றி - நீண்ட கால அளவாக, மின்னி எழுகின்ற மேகங்கள் இல்லாமையால்; வெந்துயரம் பெருகுதலும் - கொடிய துன்ப நோய் மிகவே; வேத நல் நூல் மன்னும் முனிவரை அழைத்து - அந்த அரசன், வேதங்களையெல்லாம் கற்றறிந்த முனிவர்களை அழைத்து வந்து; மாதானம் கொடுத்தும் வான் வழங்காதாக - அவர்களுக்கு வேதங்களில் கூறியபடி சிறந்த தானங்களைக் கொடுத்த போதும் மழை பெய்யாது போகவே; பின்னும் முனிவரர்க் கேட்ப - மறுபடியும் முனிவர்களை அழைத்து மழை பெய்விக்க வழி யாதெனக் கேட்க; கலைக் கோட்டு முனிவரின் வான் பிலிற்றும் என்றார் - கலை கோட்டு முனிவன் வந்தால் இங்கு மழை பெய்யும் என்றார்கள்.

அன்னவன்: அத்தகைய பெருமையுடையவன் என்பது பொருளாம். தான்: இங்கு அசை. மின்னலோடு கூடிய கார் மேகமே மழை பொழிவதாதலால் ‘மின்னியெழு முகில்’ என்றார். வெம்துயரம் வெந்துயரம்: பண்புத் தொகை. வான்: இடவாகு பெயர் - மேகத்தைக் குறிக்கும். பிலிற்றல்: பெய்தல். மாதானம்: வேதங்களில் கூறியபடி செய்த உயர்ந்த தானங்கள். மன்னும்: நிலை பெற்ற.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the fair land he guarded and ruled, for a long stretch of time
  2. no clouds rose flashing with lightning, and bitter suffering grew;
  3. he summoned the sages steeped in the good Vedic books and gave great gifts, yet the sky gave no rain;
  4. and when he asked the sages again, they said, 'If the deer-horned sage comes, the sky will pour rain.'

What the poem says

A long drought strikes Urōmapataṉ's kingdom and no rain clouds gather. The king calls in learned sages and makes the great gifts prescribed in the Vedas, but still no rain falls.

When he asks the sages again, they tell him that only the presence of the deer-horned sage will bring the rain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavaṉ tāṉ purantu aḷikkum tiru nāṭṭil neṭuṅ kālam aḷavatu āka
miṉṉi eḻu mukil iṉṟi ven tuyaram perukutalum, vēta nal nūl
maṉṉu muṉivarai aḻaittu, mā tāṉam koṭuttum vāṉ vaḻaṅkātu āka,
piṉṉum muṉivarark kēṭpa, 'kalaikkōṭṭu muṉi variṉ vāṉ piliṟṟum' eṉṟār.