கம்பராமாயணம் 2051 · அயோத்தியா 6.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வைகல் மாலை வாய் - நாளின் மாலைக் காலத்தே; நியமம் செய்து - செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து; மரபுளி இயற்றி - செய்ய வேண்டிய முறைப்படியே செய்து; வேலைவாய் அமுது அன்னாளும் - பாற்கடலிலிருந்து தோன்றிய அமுதத்தை ஒத்தவளும்; வீரனும் - இராமபிரானும்; பாரின் - பூமியில்; மாலை விரித்த நாணல் பாயல்வாய் - வரிசையாக விரிக்கப் பெற்ற நாணற்புல்லாகிய படுக்கையிலே; வைகினர் - உறங்கினராக; தம்பி - இலக்குவன்; காலைவாய் அளவும் - காலைப் பொழுது வரும் வரை; வரி வில் ஏந்தி - கட்டமைந்த வில்லை ஏந்தி; இமைப்பிலன் - கண் இமையாது; காத்து நின்றான் - அவ்விருவரையும் காவல் செய்து நின்றுகொண்டேயிருந்தான்.
இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் கண் உறங்காமல் நின்று கொண்டே காவல் செய்து கொண்டிருந்தான் என்பதாம். “மாலை விரிந்த நாணல் பாயல்” - மாலையாக விரிந்த நாணற்புல் படுக்கை என்றவாறாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the evening they performed the rites, doing all as tradition prescribes;
- she who was like the nectar from the sea and the hero
- lay down to rest on a bed of reed grass spread in rows on the bare ground; holding his banded bow,
- the younger brother stood guard until morning without closing his eyes.
What the poem says
After the evening rites, Irāmaṉ and Cītai, a prince and princess used to palace beds, sleep on a mat of reed grass laid out on the ground.
Ilakkuvaṉ stays awake all night, standing with his bow in hand and never blinking, to guard them. His sleepless vigil is one of the best-known images of his devotion and will be recalled later in the story.